எளிய வகையில் கணித வகுப்பு… நடத்துபவர் ஆசிரியர் ஜேம்ஸ் சா செ பென்ஹர்.
James SC Benher B.Sc., B.Ed., பட்டதாரி ஆசிரியரான இவர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.
இவர் தமது பள்ளிப் படிப்பை ஈரோடு, சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கல்லூரிப் படிப்பை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் பிஎட்., பட்டம் பெற்றுள்ளார்.
2006 முதல் 2012 வரை ஈரோடில், BRTE ஆகவும், 2012 முதல் பட்டதாரி ஆசிரியராக மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்க்கு கணிதம் பயிற்றுவித்தும் வருகிறார்.
இந்தத் தொகுப்பில், 7ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் பாடங்கள் குறித்து நாம் கற்றுத் தெளியலாம்!