கல்வி அலுவலர்களுக்கு வங்கிக் கணக்கு, ரொக்க இருப்பு விவரங்களை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Published:

school
school

அரசுப் பள்ளிகளின் வங்கிக் கணக்கு, ரொக்க இருப்பு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ” தமிழகத்தில் உள்ள அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகள் மற்றும் இருப்பு பற்றிய விவரங்களை நிதித்துறை கோரியுள்ளது.

இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பராமரிக்கப்படும் அனைத்து வகையான வங்கிக்கணக்குகள் மற்றும் இருப்புத்தொகை விவரங்களை சேகரித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகத்திடம் விரைவாக சமர்ப்பிக்க வேண்டும்.

மிகவும் முக்கியமான பணிகள் என்பதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளது..

Related articles

Recent articles

spot_img