
1800-இல் கடல்வாரியம் ௱௮ர௨ 8௦20 நிறுவப்பட்டது.
1808-இல் சென்னை மக்கள் தொகை (2, 75,000) – கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1808-இல் மெக்கன்ஸி என்பவர் தென்னிந்திய ஏட்டுச் சுவடிகள் சேகரித்துள்ளது பற்றிய விவரங்கள் வெளியானது.
இதே ஆண்டில் அஞ்சல் வழி பார்சல்களை அனுப்பத் தொடங்கினார்கள்.
1810-இல் கூவம் ஆற்றில் மீன் பிடிக்க அனுமதி கேட்டு மீனவர்கள் மனுச் செய்துள்ளனர். மீன் பிடிக்கச் சென்றபோது இறந்துபோன படகோட்டிகளுக்குக் கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
1818-ஆம் ஆண்டில் புதிய நாணயங்கள் வெளியிடப் பட்டுள்ளன. பகோடா போன்ற தங்க நாணயங்கள் நிறுத்தபட்டு வெள்ளி போன்ற ரூபாய் நாணயங்கள் செலாவணிக்கு நுழைந்தன.
1819-இல் நீலகிரி மலைப்பாதை போடப்பட்டது.
காவேரியில் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே பாலம் பழுது பார்க்கப்பட்டது.
1820-இல் தலைகிறந்த பிரிட்டீஷ் கவர்னர்களில் ஒருவரான தாமஸ் மன்றோ சென்னை மாகாணக் கவர்னராக நியமனம் ஆனார்.
1821-இல் மிஸனரி சொசைட்டியின் வாயிலாகத் தேவாலயம் ஒன்று கட்டப்பட்டது. சென்னைக்கு அருகில் பரங்கிமலையில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது.
1822-இல் சிவசமுத்திரம் தீவுப்பாலம் கட்டப் பட்டது. கவானர் மன்றோவின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் துவககப்பட்டன. அதில் எழுத்தறிவித்தல், கல்வி அறிவு பற்றி விசாரணைகள், நீர்ப்பாசன வசதிகள், கூவம் ஆறு தூய்மைப் படுத்துதல், மசூலிப்பட்டணம் – செகந்திராபாத் சாலை அமைப்பு, இந்தியப் பத்திரிகை வெளியீட்டு விதிகள் தாராளமாக்கப்படுதல், காவேரி டெல்டா பகுதி பற்றிய நகல் அறிக்கை தயாரித்தல் போன்ற பணிகள் சிறப்பான முறையில் தொடங்கப்பட்டது.
1845-இல் இந்திய – பிரிட்டானிய மக்கள் குடியுரிமை கோரினார்கள். இந்தியப் பிரஜையாக மாற அவர்கள் முயற்சித்தனர்.
1826-இல் மூன்று இந்துக் குழந்தை களுக்குக் கட்டாய ஞானஸ்நானம் அலித்ததாகப் புகாரும் அது குறித்து நீதி விசாரணையும் நடந்தது.
மூன்று ஆங்கில நீதிபதிகளைப் பணிநீக்கம் செய்தது பற்றிப் பொதுமக்களிடம் விசாரணையும் விவாதமும் நடத்தி, மிகப் பெரும்பான்மை மக்கள் கூடி அந்த நீதிபதிகள் நீக்கம் குறித்து இயக்குநர் குழுவுக்கு மனு அளித்தனர்.
1846-இல் மாநிலத்தில் அடித்த பெரும் புயல், மழையினால் என்றுமில்லாத அளவுக்குப் பலத்த அழிவு ஏற்பட்டன. இதே அண்டு நவம்பர் மாதம் பெரும்: சூறாவளிக் காற்று அடித்தது. முன்பு நடந்ததைவிட இது. மிகக் கொடுமையானது. சென்னை துறைமுகத்தில் தங்கிய பல கப்பல்கள் நாசமாயின; காணாமலே போய்விட்டன.
1847-இல் சென்னை நகரில் பாலிடெக்னிக் திறக்கப்பட்டது.
ஸ்காட்லாந்து அயர்லாந்தில் நடந்த துக்க கரமான நிகழ்ச்சிகளுக்குப் பரிகாரம் காண இம்மாகாணத்தில் நிதி வசூல் நடத்தப்பட்டது.
கூம்சூரில் மக்கள் உயிர்ப்பலி இட்டார்கள்.
இம்மாகாணத்தில் 5 இந்துக் குழந்தைகள் மதம் மாறி அவர்களுக்கு ஞானஸ்நானம் செய்தபோது பிராமணர்கள் தங்களுக்குள் வேறுபட்டனர். அதில் ஒரு குழந்தை ஞானஸ்நானத்துக்குப் பிறகு மீண்டும் இந்துவாக மாறியது. இதனால் அவனை உறவினர்கள் சாதியில் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். அவனையும் அவனது பெற்றோரையும் ஒதுக்கி வைத்தனர்.
மாவட்டங்களில் தாய்மொழிக்கல்வியும், ஐரோப்பியக் கல்வியும் சீர்திருத்தங்களுடன் அமலுக்கு வந்தன.
நாட்டாண்மைக் கழகக் கல்விக்காகத் தனித்துறை தோற்றுவிக்கப்பட்டது.
சென்னை, வங்கம்,பம்பாய் போன்ற மூன்று மாகாணங்களிலும் பல்கலைக் கழகங்கள் உருவாயின.
மகாபலிபுரத்தில் அமைந்துள்ள 7 ரதங்களை அரசே கைப்பற்றியது; பாதுகாக்கவும் ஆணைகள் வெளியாயின.
இம்மாகாணத்தில் முதன் மூதலாக 1856இல், சென்னைக்கும் ஆற்காட்டுக்கும் இருப்புப் பாதை போடப் பட்டு இரயில் ஓடியது.
மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்ச நிவாரணமாகப் பஞ்ச மீட்பு வேலையின் அறிகுறியாகக் கிழக்குக் கரையோரக் கால்வாய் வெட்டப்பட்டது. இதுவே பின்னர் 457 மைல் நீளமுள்ள பக்கிங்காம் கால்வாயாக வளர்ச்சி பெற்றது. ்
சென்னை மாகாணத்தின் கிழக்குக் கடற்கரை யோரமாக வடக்கே காக்கிநாடா முதல் தெற்கே மரக்காணம் வரை இக்கால்வாய் வெட்டப்பட்டது. இவ்வேலை முதவில் 1806இல் தொடங்கப்பட்டது. பஞ்ச நிவாரணத்திற்கும் பொது மக்கள் பணியாகவும் இது செய்யப்பட்டது.
சார்லஸ் டிரிவேலியன் கல்வி வரி விதிப்பதை எஷ௫ிர்த்தார்.
மேல் கூறப்பட்டுள்ள செய்திகள் யாவையும் சென்னை மாகாணத்தில் 16,19ஆம் நாற்றாண்டுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், நிறைவேற்றப்பட்ட பணிகளில் பெரும் பாலானவை. இவை மக்கள் சார்பான பணிகள்: மக்கள் அளித்த
மனுக்களின் பேரில் உரியவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டவை என்றால் மிகையல்ல.
பாண்டிச்சேரி ஆங்கிலேயர்கள் கையில் வந்தபிறகு அங்கு குத்தகைக்காரர்களை நடத்திய அன்னிதங்களை எழுத வேண்டுமானால் பாரதக் கதையை வியாசர் எழுதியது போல எழுதினாலும் அடங்காது. நூறு ஆண்டுகள் ஆகலாம். குடிமக்கள் படுகின்ற தொல்லைகள் அளவில்லை என்றும் குடிமக்கள் மாடு கன்றுகளை விற்றுக் கொடுத்தும்கூட அவர்களால் வரிகட்ட வழியின்றி அடியும் உதையும் பொறுக்காமல், ஓடிப் போகின்றபோது, அவர்களது பெண்டிர்களைப் பிடித்து வைத்து மூலையிலே கட்டிப் போட்டும், மரத்திலே கட்டி வைத்தும், புடவைகளை அவிழ்த்தும், மானபங்கப் படுத்தியும், அவமானம் செய்யப் பட்டுள்ளனர்’ என்றும் நாட்குறிப்பேட்டாளர் ஆனந்தரங்கப்பிள்ளை குறிப்பிடுகிறார்.
புனித ஜார்ஜ் கோட்டைப் புதையல்
அக்காலத்தில் பிரஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் இந்த நாட்டின் திரவியங்கள் மீதே கண்ணாயிருந்தனர் என்பதை ரங்கப்பிள்ளை அவர்கள் பல்வேறு இடங்களில் தம் நாட்குறிப்பில் எழுதியுள்ளார். ஒருமுறை பிரஞ்சுக் கவர்னர் ரங்கப்பிள்ளை யிடம் சென்னை கோட்டையில் ஒரு திணற்றுக்குள் கருவூலங்கள் வைத்திருப்பதைக் கூறி, மேலும் சில இடங்களைப் பற்றியும் கூறியிருக்கிறார்.
அக்காலத்தில் படையெடுப்புகள் நிகழும் போது மக்கள் பீதியடைந்து தாங்கள் சேர்த்து வைத்த செல்வங்கள் அனைத்தையும் மூட்டையாகக் கட்டி ஆறுகளிலோ, திணறுகளிலோ, குளங்களிலோ போட்டுவைத்தும், பூமியில் புதைத்து வைத்தும் உயிர் பிழைத்தால் போதுமென்று ஓடியிருக்கிறார்கள். தேவனாம்பட்டினம் என்ற செயின்ட் டேவிட் கோட்டையில் ஆற்காடு நவாப் போர் தொடுத்தபோது இத்தகைய நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டதையும் விளக்கியுள்ளார்.
எம்.எஸ். பாண்டியனின் “ஆவணங்கள் பேசினால்” புத்தகத்திலிருந்து சில 18-ஆம் நூற்றாண்டுச் செய்திகள்.
தொகுப்பு: பி.எஸ்.நரேந்திரன்