
கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Business Development Associates
Sales & Service Associate
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
மாதச்சம்பளமாக ரூ.18000/- மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தனிப்பட்ட நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்களின் திரையிடல் செய்யப்படும்
விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் (நேர்காணல் தேதி மற்றும் இடம் வங்கியால் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்).
காலியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைப்பதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2021
Apply Online – https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp