ஊதியம் மாதம் ரூ. 56,100..! டி.என்.பி.எஸ்.சி!

Published:

jobs - 2026

டி.என்.பி.எஸ்.சி. புதிய அரசு வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் காலிப் பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

குறைந்தது மாதம் ரூ. 56 ஆயிரம் வழங்கப்படும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 26-ம் தேதியே கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணி குறித்த விபரங்கள்-

காலியிடங்கள் எண்ணிக்கை – 29

சம்பளத் தொகை – மாதம் ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700 வரை

கல்வி தகுதி – முதுகலைப் பட்டம், பி.இ., கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் உள்ளன….

வயது வரம்பு – எஸ்சி. எஸ்டி. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அனைத்து வகுப்பை சேர்ந்த விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது. மற்றவர்கள் 01.07.2022 அன்று 32 வயதை தாண்டியிருக்க கூடாது.

பதிவுக் கட்டணம் – ரூ. 150

தேர்வுக் கட்டணம் – ரூ. 200 -ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

தேர்வு முறை – எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 26.03.2022

கூடுதல் விபரங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிக்கையை க்ளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள் –

Related articles

Recent articles

spot_img