விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரவும் பாலியல் குற்றங்களை தடுக்க காவல்துறைக்கு சுதந்திரம் வழங்க கோரியும் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் இந்த கண்டன ஆர்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். மேலும் இந்த ஆர்பாட்டத்தில் பாஜகவின் மாநில பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது,
பாலியல் குற்றம் குறித்து பேசுவதற்கு திராணி இல்லாத கட்சி திமுக.திமுக மாநில மகளிர் அணி தலைவி கனிமொழி பட்டியலின பெண்ணிற்கு நியாயம் வேண்டும் என ட்விட்டரில் பதிவு போடுகிறார் இரண்டு நிமிடங்கள் கழித்து அதை அவரே நீக்குகிறார் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் வேண்டும் என பதிவிடுகிறார் இப்படித்தான் தமிழக அரசியல் உள்ளது.திமுக ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக மாறி உள்ளது.ஒவ்வொரு நாளும் நாம் படிக்கின்ற செய்தி முந்தையநாள் செய்தியை விட கோரமாக உள்ளது.பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்வதற்காக இங்கு கூடவில்லை.22 வயது இளம்பெண் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பேச இங்கு யாரும் இல்லை அதனால் பாரதிய ஜனதா கட்சி களமிறங்கியது உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவில் எந்த பாலியல் வழக்கிலும் கிடைக்காத தண்டனை இந்த வழக்கிற்கு கிடைக்கும் என அறிவித்துள்ளார்.ஆனாலும் அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது.மக்களுக்கு திமுக ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை.
நடக்க கூடிய குற்றங்களிலும் எங்கோ ஒரு மூலையில் திமுகவினருக்கு தொடர்புள்ளது.வெள்ளூரில் நிர்பயா சம்பவம் போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.அதில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இமெயில் மூலம் புகார் அளித்துள்ளார் ஆனால் மூன்று நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை. பாஜக கொடி கைதூக்கி விடக் கூடாது என்பதே காவல்துறையின் முதல் வேலையாக உள்ளது இரண்டு அமைச்சர்கள் இந்த மாவட்டத்தில் இருந்து கொண்டு காவல்துறையை நசுக்கி கொண்டுள்ளனர்.காவல் துறைக்கு சுதந்திரம் இல்லாத போது 22 வயது இளம் பெண்ணுக்கு எப்படி காவல்துறை பாதுகாப்பு கொடுக்க முடியும்.தற்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை நம்பிக்கை காவல்துறை மீது பெண்களுக்கு நம்பிக்கை வரவேண்டும்.திமுகவினர் காவல்துறையை கட்டப்பஞ்சாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.பக்கத்து மாநிலங்களில் நடைபெற்ற பாலியல் குற்றங்களுக்கு குரல் கொடுத்த திமுக மாநில மகளிர் அணி தலைவி கனிமொழி தனது பக்கத்து தொகுதியில் பட்டியலின பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமைக்கு குரல் கொடுக்காதது ஏன்.காவல்துறையை சீர்திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட கமிஷன் தலைவரின் பாதுகாவலருக்கு அரிவாள் வெட்டு என்று செய்தி வந்துள்ளது.அப்படி என்றால் யார் காவல்துறையை சீர் திருத்ததுவார்கள்.
அவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பார்கள்.துபாயில் பல மாதங்களாக கண்காட்சி நடைபெறுகிறது ஆனால் தற்போது தமிழகத்தின் அரங்கை திறந்து வைக்க முதலமைச்சர் செல்கிறார் ஆனால் அவரது குடும்பமே ஒரு மாதத்திற்கு முன் துபாய் சென்றுவிட்டது துபாயில் நடக்கும் மர்மம் என்ன. தமிழக மக்களின் நலனுக்காக முதலமைச்சர் துபாய் செல்லவில்லை ஏதோ ஒரு தவறு செய்வதற்காகத்தான் துபாய் செல்கிறார்.
தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி இங்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன.இதனால் தமிழகத்தில் நடைபெறும் முக்கிய குற்றங்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன.
குரல் இல்லாத சகோதரிகளுக்கு பாரதிய ஜனதா கட்சி குரலாக இருக்கும். மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்கள் சகோதரியின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி சகோதரிக்கு அரசு வேலை வழங்கி அவர் கம்பீரமாக வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.எம்பி எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் வராத போதும் பாரதிய ஜனதா கட்சி பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஓடோடி வரும்.அதைத் தவிர்த்து விருதுநகரில் மூன்று லட்சம் தொழிலாளர்கள் பட்டாசு தொழிலை நம்பியும் நேரடியாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பணிசெய்து வருகின்றனர் தற்போது உள்ள பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.பட்டாசு தொழிலை அழிப்பதற்காக பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வருகின்றனர் குறிப்பாக இந்து பாரம்பரிய விழாக்களை அளிப்பதற்காகவே இதுபோன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன.
பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக உள்ள ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி.பட்டாசு தொழிலுக்கு பாரதீய ஜனதா கட்சி நிச்சயம் ஆதரவளிக்கும் பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக பாரதிய ஜனதா கட்சி இருக்கும்.வரும் காலங்களில் எந்தவித தடையும் இல்லாமல் பட்டாசு தொழில் செயல்பட பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும் என பேசினார்.







