
சிறுநீரகக் கற்கள் கரைய…
ஓமத்தைக் கஷாயம் வைத்து பாலில் கலந்து சாப்பிட சிறுநீரகத்திலுள்ள கற்கள் கரைந்து சிறுநீருடன் வெளியேறும்.
கக்குவான் இருமலுக்கு…
கண்டங்கத்திரி வேரை சுத்தம் செய்து வெள்ளாட்டுப் பாலில் போட்டுக் காய்ச்சி உள்ளுக்குக் கொடுத்து வர கக்குவான் இருமல் குணமாகும்.
கர்ப்பப்பை சுருங்க…
லவங்கப்பட்டை 35 கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாகக் காய்ச்சி காலையில் மட்டும் ஓர் அவுன்ஸ் வீதம் பருகி வர சில நாள்களில் கர்ப்பப்பை சுருங்கும்.
கருந்தேமல் சரியாக…
காலையும் மாலையும் வெந்நீரில் அந்த இடத்தை சுத்தம் செய்து அதன் மேல் கற்பூரவல்லி, திருநீற்றுப் பச்சை இலை இரண்டையும் கசக்கி நன்றாகத் தேய்த்து வர மூன்றே நாள்களில் குணமாகும்.
இந்திரியம் பெருக…
ஆளி விதையை பாலில் வேக வைத்து வெல்லம் சேர்த்து லேகியம் போல் கிளறி காலை, மாலை சுண்டைக்காயளவு சாப்பிட்டு வர இந்திரியம் பெருகும்.





