விசுவாசம் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் இன்று முதல் ஆரம்பம்

விசுவாசம் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் இன்று முதல் ஆரம்பம்

அஜித் நடித்து கொண்டிருக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அஜித்தின் அறிமுகப்பாடல் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துவிட்டது.

இதனையடுத்து இன்றுமுதல் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளின் படப்ப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதிரடி சண்டைக்காட்சி படப்பிடிப்பு இன்னும் பத்து நாட்களுக்கு நடைபெறும் என்றும் இதனையடுத்து ஐதராபாத்தில் இருந்து படக்குழுவினர் சென்னை திரும்பவுள்ளாதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் வரும் ஜூன் 1 முதல் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருப்பதாகவும் அதற்கான செட் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது,

அஜித், நயன்தாரா, யோகிபாபு, போஸ்வெங்கட், தம்பி ராமையா, ரோபோசங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.