
100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,” என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் வாயிலாக ஒளிபரப்பப் பட்ட பாட்காஸ்ட்க்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் ஒரு சாமான்ய குடிமகன் உத்தர பிரதேசத்தின் குடிமகன். ஒரு குடிமகனோடு சேர்ந்து ஒரு யோயும் கூட. நான்… அனைவரின் நலன் அனைவருடைய…. நோயற்ற வாழ்வை விரும்புபவன். அனைவருடன் அனைவருக்குமான முன்னேற்றம் மந்திரத்தை விசுவாசிப்பவன்.
மேலும்…. இந்த உணர்வோடு தான் நாங்கள் பணிகளையும் ஆற்றுகிறோம். இப்போது நீங்களே சொல்லுங்கள், உலகத்தின் மிகத் தொன்மையான, தர்மம் மற்றும் கலாச்சாரம் தான் சனாதன தர்மம். அதன் பெயரிலிருந்தே உங்களால் புரிந்து கொள்ள முடியும். உலகத்தின் எந்தவொரு…. சாதி பிரிவு மதம் அனைத்திற்குமே, அவை சங்கடங்களைச் சந்தித்த காலங்களிலே, சனாதன தர்மத்தைச் சேர்ந்தவர்கள் அபயம் அளித்திருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக, அவர்கள்…. அனைத்து விதங்களிலும் தழைத்து வளரவும் சந்தர்ப்பங்களை அளித்திருக்கிறார்கள்.
ஆனால்…. பதிலாக அவர்களுக்கு என்ன கிடைத்தது? பலனாக என்ன விளைந்தது. உலகத்திலே வேறு உதாரணமேதும் இல்லை. உதாரணமேதும் இல்லை. எந்த ஒரு இந்து அரசரும் கூட, உலகின் எந்த இடத்திலும் கூட, தன்னுடைய…. பலத்தாலே, தன்னுடைய பராக்கிரமத்தாலே, யார் மீதும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தியதில்லை. எங்குமே கிடையாது. எடுத்துக்காட்டாக கூறுகிறேன்.
அயம் நிஜபரோ வேதி. கண்னா லகுசித்சாம். உதார் சரிதானாம்… து வசுதைவ குடும்பகம். இது சனாதனத்தின் வாக்கியம். உலகத்திலே இப்படியா யாராவது கூறுகிறார்களா? உலகில் யாராவது பின்பற்றுகிறார்களா? யாரும் செய்தது இல்லை. எல்லோரும் பிடுங்கிக் கொள்ள விரும்புகிறார்கள். இவர் நம்மவர் இவர் அந்நியர் என்ற பேதபாவத்தை, சிறுமதி குறுமனம் படைத்தவர்கள் தான் செய்கிறார்கள்.
பரந்த மனப்பான்மை உடையவர்களுக்கு உலகனைத்துமொரு, குடும்பமாகும். இந்த உணர்வோடு தான், சனாதனிகள் எப்போதுமே பணியாற்றி வந்திருக்கிறார்கள். மேலும் இன்றும் கூட உதாரங்களைப் பார்க்க முடியும்.
ஒரு, 100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே, 100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே, ஒருமுஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக வசிக்க இயலும். தங்கள் திருநாட்கள் விழாக்களை, அவர்கள்…. தங்களுடைய அனைத்து, தார்மீக கடமைகளை ஆற்ற முடியும்.
அல்லது எந்த, சமய மத சம்பிரதாய பிரிவைப் பின்பற்றினாலும் அவர்கள் தங்கள் வழிமுறைப்படி அனைத்து, மதரீதியான செயல்பாடுகளைச் நிறைவேற்றத் தேவையான முழு சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் நான் கூறுகிறேன் 100 குடும்பங்களுக்கு இடையே……. ஒரு இந்துவை விட்டுத் தள்ளுங்கள், 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு இடையே 50 இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா? இருக்க முடியாது.
இதோ பங்ளாதேசம் கண்கூடான உதாரணம். இதற்கு முன்பாக பாகிஸ்தானம் உதாரணமாக இருந்தது. ஆஃப்கானிஸ்தானிலே என்ன நடந்தது? இவை…. தெளிவாகத் தெரிவிக்கின்றது. மேலும்…. புத்திசாலித்தனம் இதுதான். எ…. எங்கோ புகை எழும்புகிறது….. அல்லது ஒருவர் தாக்கப்படுகிறார் என்றால், நாம் தாக்கப்படுவதற்கு முன்பாக நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.
இப்படி சுதாரித்துக் கொள்ளச் சொல்லப்படும் போது, அனைவரையும் நாம் சமபாவத்தில் சமநோக்கில் பார்க்கும் போது, உத்தர பிரதேசத்தில் முஸல்மான்கள் மிக அதிகமாக பாதுகாப்போடு இருக்கிறார்கள். மிக அதிக அளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்துக்கள் பாதுகாப்பாக இருகிறார்கள் என்றால் அவர்களும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.
இங்கே 2017க்கு முன்பாக கலவரங்கள் நடந்தது என்றால், இந்துக்களின் கடைகள் எரிந்தன என்றால் முஸல்மான்களுடையதும் எரிந்தன இந்துக்களின் வீடுகள் எரிந்தன என்றால் முஸல்மான்களுடையதும் எரிந்தன. 17க்கும் பிறகு கலவரங்கள் நின்று போயின. இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் முஸல்மான்களும் பாதுகாப்பாய் இருக்கிறார்கள்.
மேலும் இரண்டாவதாக… நான் கூறினேன், வரலாற்றிலே எந்த உதாரணத்தையும் காட்ட முடியாது, அதாவது தனது பலத்தாலோ பராக்கிரமத்தாலோ, எந்தவொரு இந்து ராஜாவும், எந்தவொரு தேசத்தின் மீது வலிந்து ஆக்கிரமித்தார்களா? என்றுமே கிடையாது. சரித்திரம் சான்று கூறுகிறது. நீங்கள் ஏடுகளைப் புரட்டிப் பார்க்கலாம்.
பகவான் இராமன் இலங்கை சென்றான். இலங்கையிலே ராவணன் மீது வெற்றி, பெற்ற பிறகு, இலக்குவன் அங்கேயிருந்த வளத்தைப் பார்த்து சற்று மதிமயங்கினான். பக்வான் இராமன் கூடாது இலக்குவனே, என்றான். அவர் இலக்குவனிடம் ஒன்று மட்டும் கூறினார். அது….. இன்றைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பது என்று கருதுகிறேன்.
அந்த வேளையில் அவர் கூறியது…. இலக்குவனிடம் அது…. அவரளித்த….. இராமனளித்த வழிகாட்டுதல், இலங்கை பற்றியது. அபி ஸ்வர்ணமயி லங்கா, நமே லக்ஷ்மண் ரோசதே, ஜனனி ஜன்மபூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயஸி. இலக்குவனே! இலங்கை தங்கத்தால் இழைத்ததாகவே இருந்தாலும் கூட, ஆனால் நினைவில் கொள்வாய், எனக்கு இதில் நாட்டமில்லை எனக்கு இதில் ஈர்ப்பு இல்லை. எனது பணி, அது அன்னை சீதையை, தீயவன், இராவணனிடமிருந்து மீட்டெடுப்பது அதை நான் செய்து விட்டேன்.
இப்போது நாம் இங்கிருந்து புறப்பட வேண்டும். ஏனென்றால், எந்த அன்னை பிறப்பளித்தாளோ, மேலும் எங்கே நாம் பிறப்பெடுத்தோமோ அதைவிட, சிறப்பான சுவர்க்கமே ஆனாலும் சிறப்பான வேறொரு இடம் இருக்கவே முடியாது வேறு உத்தமமான இடம் இருக்க முடியாது கண்டிப்பாக கிடையாது. ஆகையால் நாம் வெளியேற வேண்டும்.
இந்த உதாரணத்தை நான் ஏன் கொடுக்கிறேன் என்றால், யார் சனாதன தர்மம் மீது தாக்கினார்களோ அவர்கள் உணர வேண்டும். அவர்கள் உணர்ந்தாலே கூட அது போதுமானது. இப்படியான பல உதாரணங்கள் பல காலகட்டங்களில் உங்களுக்குக் கிடைக்கும்.
— தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்