
ஐ.பி.எல் 2025 – ராஜஸ்தான் றயல்ஸ் vs கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் – கௌஹாத்தி – 26.03.2025
டி காக்கின் அபார ஆட்டம்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (151/9, துருவ் ஜுரல் 33, யசஸ்வீ ஜெய்ஸ்வால் 29, ரியான் பராக் 25, ஆர்ச்சர் 16, சஞ்சு சாம்சன் 13, வபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயின் அலி, வருன் சக்ரவர்த்தி தலா 2 விக்கட், ஜான்சன் 1/42) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (17.3 ஓவரில் 153/2, கிவிண்ட டி காக் ஆட்டமிழக்காமல் 97, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 22, அஜிங்க்யா ரஹானே 18, ஹசரங்கா 1/34) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (11 பந்துகளில் 13 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த அணித்தலைவர் ரியான் பராக் (15 பந்துகளில் 25 ரன், 3 சிக்சர்) மற்றொரு தொடக்க வீரரான யசஸ்வீ ஜெய்ஸ்வால் உடன் இணைந்து (24 பந்துகளில் 29 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களான நிதீஷ் ராணா (9 பந்துகளில் 8 ரன்,) ஹசரங்கா (4 பந்துகளில் 4 ரன்) துருவ் ஜுரல் (28 பந்துகளில் 33 ரன், 5 ஃபோர்), ஜோஃப்ரா ஆர்ச்சர் (7 பந்துகளில் 16 ரன்), ஷுபம் துபே (12பந்துகளில் 9 ரன்), ஷிம்ரோன் ஹெட்மயர் (8 பந்துகளில் 7 ரன்) ஆகியோர் கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கலுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியவில்லை. ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகள் இழப்பிற்கு 151 ரன் எடுத்தது.
152 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் மொயின் அலி (12 பந்துகளில் 5 ரன்) மோசமான தொடக்கம் தந்தார்.
அவருடன் களமிறங்கிய க்விண்டன் டி காக் (61 பந்துகலில் 97 ரன், 8 ஃபோர், 6 சிக்சர்) கடைசி வரை ஆடி வெற்றியை அணிக்குப் பெற்றுத்தந்தார். அவருக்கு ஜோடியாக அஜிங்க்யா ரஹானே (15 பந்துகளில் 18 ரன்) மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி (17 பந்துகளில் 22 ரன்) இதனால் 17.3 ஓவர்களிலேய வெற்றி இலக்கை அடைந்தது கொல்கொத்தா அணி.
கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.