புல்வாமா தாக்குதல் குறித்து விசாரிக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

Published:

supreme court of india - 2026

புது தில்லி: புல்வாமா தாக்குதல் குறித்து விசாரிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு 2 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரி ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் புல்வாமா தாக்குதல் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று அது தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img