ஐஎன்எக்ஸ் நிதிமோசடியில் சிதம்பரம் பற்றி டிவிட்டரில் பதிந்த நபரை மிரட்டிய கார்த்தி! எப்படின்னு பாருங்க!

கட்டுரைகள் சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
chidambaram karthi - 2026

ஐஎன்எக்ஸ் நிதி மோசடியில் தந்தை ப.சிதம்பரம் குறித்து டிவிட்டரில் பதிவு செய்த நபரை மிரட்டியுள்ளார் மகன் கார்த்தி சிதம்பரம். ஏற்கெனவே பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தைக் குறித்து சிம்பாலிக்காக குறிப்பிடும் போது, பப்பா சோர் (PC) பேட்டா சோர் என்று குறிப்பிடுவார். அதனை இப்போது மிரட்டல்களின் மூலம் மெய்ப்பித்து வருகிறார் கார்த்தி சிதம்பரம் என்று டிவிட்டர்வாசிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றார்கள்.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தந்தை-மகன் இரட்டையரைக் கேள்வி கேட்பவர்களுக்கு அவர் ட்விட்டரில் சம்பந்தப்பட்ட நபருக்கு நேரடி பதில்கள் மூலம் அச்சுறுத்தல் களை அனுப்புகிறார். ஏபிவிபி இயக்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் பிரகாஷ் பெல்வடே-பாடீல் என்பவர் சிதம்பரம் குறித்து ஒரு நாளிதழின் கட்டுரையைப் பகிர்ந்து கொண்டு கருத்து பதிவு செய்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் மீண்டும் தான் கட்டுரையை எழுதத் தொடங்கியிருப்பதை டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் சிதம்பரம்! அதற்கு பதிலளித்த பிரகாஷ் பெல்வடே-பாட்டீல் @PrakashBelwade “நீங்கள் எவ்வாறு பணம் சம்பாதித்தீர்கள், உங்கள் மகனையும் அதில் திறமைசாலியாக்குங்கள்” இந்த தந்திரம் மற்றவர்களுக்கு உதவக்கூடும். 10 ஏக்கர் நிலத்தில் பைங்கன் சாகுபடியிலிருந்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதையும் சுப்ரியா_சுலே எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்… என்று தெரிவித்திருக்கிறார்.

karthi tweet1 - 2026

இதற்கு, பெல்வாட்-பாட்டீலுக்கு கார்த்தி சிதம்பரம் அச்சுறுத்தும் வகையில் தனிப்பட்ட வகையில் மெசேஜ் அளித்தார். என்னோட அலுவலகத்துக்கு நேரில் வா.. உனக்கு என் அறிவுரை தேவைப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

கார்த்தி தனக்கு ஜால்ரா தட்டாமல், எதிர்த்து கருத்து பதிவு செய்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பதில் பதிவு செய்வது இது முதல்முறை அல்ல.

டிவிட்டர் பயனர் மாதவ் தனது டைரக்ட் மெசேஜ்-களின் ஸ்கிரீன் ஷாட்களை 2016 இல் கார்த்தி மிரட்டிய விதத்தைப் பகிர்ந்து கொண்டார்! அதில் கார்த்தி, “நான் ஒரு நாள் உங்களை கவனித்துக் கொள்வேன். என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளவும். ” என்று குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக, அனைவரும் அறியும் வகையில் டிவிட்டர் பதிவுகளில் பதில் சொல்வதைக் காட்டிலும், தனிப்பட்ட இன்பாக்ஸுக்கு அதாவது டைரக்ட் மெசேஜ்க்கு வந்து, மோசமான மொழியில் அச்சுறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று குறிப்பிடுகிறார்கள் டிவிட்டர் வாசிகள்.

இது போல் இன்னும் பலர் தங்களது டிவிட்டர் பதிவுகளின் டைரக்ட் மெசேஜ்களை கார்த்தி சிதம்பரம் எப்படி தங்களை அச்சுறுத்தியிருக்கிறார் என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

https://twitter.com/arpitbhtnagar/status/1093407066079715328

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.