கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் முதலமைச்சர் எடியூரப்பா!

Published:

yediyurappa win - 2026

15 தொகுதி இடைத்தேர்தலில் 5ல் வென்று, 6 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது பாஜக.,

கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி தொடர 6 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், 11 இடங்களில் பாஜக., வெற்றி பெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா இடைதேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில்,
காக்வாட் தொகுதி பாஜக வேட்பாளர் ஸ்ரீமந்த் பாடில் வெற்றி பெற்றுள்ளார்.
சிக்கபெல்லாபூர் பாஜக வேட்பாளர் சுதாகர் வெற்றி பெற்றுள்ளார்.
கே.ஆர்.பேட்ட பாஜக வேட்பாளர் கே.சி.நாராயண கவுடா வெற்றி பெற்றுள்ளார்.
எல்லப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஷிவ்ராம் ஹெப்பர் வெற்றி பெற்றுள்ளார்.
கோகாக் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் ஜார்கிஹோளி வெற்றி

5 தொகுதிகளில் வெற்றி பெற்றும் 6 தொகுதிகளில் முன்னிலை பெற்றும் உள்ளதால், பாஜக., கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில் 6 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது! 5 இடங்களை கைப்பற்றியது பாஜக!

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

சிவாஜி நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஷ்வான் அர்ஷத் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

ஹன்சூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுநாத் வெற்றி

மஹாலட்சுமி லே-அவுட் தொகுதியில் பாஜக வேட்பாளர் 29,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Related articles

Recent articles

spot_img