Homeஉரத்த சிந்தனைரஜினி சார்... எல்லோருக்கும் நல்லவன்னு பேர் எடுக்க முடியாது ஸார்..!

ரஜினி சார்… எல்லோருக்கும் நல்லவன்னு பேர் எடுக்க முடியாது ஸார்..!

rajinikanth - Dhinasari Tamil

“எல்லோருக்கும் நல்லவன்” என்றொரு பட்டத்துக்காக ரஜினி அரும்பாடு படுகிறார். யதார்த்தத்தில் அது ஒரு குணக் குறைபாடேயன்றி வேறேதுவும் இல்லை.

“To be able to call a spade a spade” is a virtue.
To try and assuage the feelings of everyone concerned all the time is surely a path to ruin.

எங்கே BJP சப்போர்ட்டர், சங்கி என்று சொல்லி விடுவார்களோ என்று பயப்படுகிறார், அதற்காக வருந்துவதாகவும் ஓப்பனாகவே சொல்கிறார். அதே நேரம், எங்கே இவர் அடிப்படையில் திராவிட ஆதரவாளர் மட்டுமே என்று வகைப்படுத்தி ஓரங்கட்டி விடுவார்களோ என்றும் பரிதவிக்கிறார். எங்கே தனக்கான முஸ்லிம் ரசிக வோட்டுகள் சிதறி விடுமோ, கிறிஸ்தவ ரசிக வோட்டுகள் கிடைக்காமல் போய் விடுமோ என்றும் கவலைப் படுகிறார்.

அவருடைய சொந்த இயல்பான ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை, ஆன்மீகப் பெரியவர்களிடம் ஆழ்ந்த பக்தி, மரியாதை எல்லாம் இயற்கையாகவே இருந்தாலும் சனாதன ஹிந்துவாகக் காட்டிக் கொள்ளவும் சங்கடப் படுகிறார்.

தமிழக மீடியாவின் குரல்வளையை நெருக்கும் திமுக மீடியாவின் அசுர பண பலத்தை, அயோக்கியத்தனத்தை ஆர். எஸ். பாரதி போன்ற திமுககாரர்களே துகிலுரித்துக் காட்டியும், ரஜினி “மூத்த பத்திரிகையாளர்” என்று இன்னமும் சிந்து பாடிக் கொண்டிருக்கிறார்.

தனிக்கட்சி என்று ஒன்று ஆரம்பித்தவுடன் அவர்கள் இவர் பின்னாலா ஓடி வரப் போகிறார்கள்? இவரைக் கிண்டல் செய்தும், அசி‌க்கப் படுத்தியும், உருட்டியும், மிரட்டியும் பணியவைக்க ஆயிரக் கணக்கான மீம்களையும், அபாண்டக் கட்டுரைகளையும் அவர்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருப்பதெல்லாம் அறியாத வெள்ளந்தி மனிதனா ரஜினிகாந்த்? இல்லவே இல்லை.

“திமுக மீடியாக்காரர்களின் அபரிமிதமான காசு வேண்டும், அவர்கள் பத்திரிகை, டீவி சேனல்களில் 24 மணி நேர சப்போர்ட் வேண்டும், தன்னைப் புகழ்ந்தும் ஆராதித்தும் கட்டுரைகள் தொடரவேண்டும். ஆனாலும் தனி ஆவர்த்தனம் செய்து பார்த்து, நானே அரியணை ஏறுவேன் … ” என்று ஆரம்பித்தால் அவர்கள் சும்மாவா இருப்பார்கள்?

எல்லாவிதமான பொய், புரட்டுக் கட்டுரைகளையும் வெளியிடுவார்கள். ரஜினி பேரில், அவர் குடும்பத்தின் மேல் சேற்றை வாரிப் பூசுவார்கள். அதுதானே அவர்கள் ஸ்டைல்?

உடனே ரஜினி பயந்து அடங்கி விடுவாரா? தெரியவில்லை. ஆனால் “ஆஹா, அப்படி வாங்க (நம்ப) வழிக்கு” என்று அவசரப்பட்டுக் கமல் சொல்லியிருக்கும் ஒரே காரணத்தால், அதைச் சீர் தூக்கிப் பார்த்து, அதன் உண்மை புரிந்து, ரஜினி தீவிர யோசனையில் ஆழ்வார் என்பது மட்டும் சர்வ நிச்சயம்!

You Live Only Once. Make It Count! அவர் படித்திருக்கும் தைத்ரிய உபநிஷத்தில் சொல்லியபடி, (“ஸத்யம் வத, தர்மம் சர” – சத்தியத்தை மட்டுமே பேசு, தர்மத்தின் வழி மட்டுமே நட) ரஜினி நடப்பார் என்று எதிர்பார்ப்போம்!

  • ராம் ராமசந்திரன் (லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,155FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,519FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest News : Read Now...