chandrababu naidu in kuppam - 2026

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ‘பிரஜா சைதன்ய யாத்திரை’ மேற்கொண்டார். அதில் ஒரு பகுதியாக, அவருடைய சொந்த தொகுதியான சித்தூர் மாவட்டம் குப்பம் நகரில் சுற்றுப் பயணம் செய்தார்.

இரண்டு நாட்கள் சொந்த தொகுதியில் பஸ் யாத்திரை மேற்கொண்டார்.ஆந்திரா முதல்வர் ஜெகனுடைய அரசாட்சியின் தோல்வியைப் பற்றி விமர்சித்த படி யாத்திரையைத் தொடர்ந்தார்.

தன் பேச்சால் மக்களை மெய்மறக்கச் செய்தார். மக்களிடம் உள்ளூர் பிரச்சனைகளைப் பற்றி கேட்டறிந்தார். அப்படி இருக்கும்போது சந்திரபாபுவின் யாத்திரையின் ஒரு பகுதியாக நடந்த ஒரு நிகழ்ச்சி இப்போது சூடான டாப்பிக்காக சுற்றிவருகிறது. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

ஒரு கிராமத்தில் அவர் நடத்திய கூட்டத்தில் விசித்திரமான ஒரு காட்சி தென்பட்டது. அவருடைய சொந்த தொகுதியான குப்பத்தில் பயணித்தபோது சந்திரபாபு நாயுடு ஒரு கிராமத்தில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றார். ஜகனுடைய ஆட்சியை விமரிசிப்பதையே நோக்கமாகக் கொண்டு அவருடைய பேச்சு அமைந்திருந்தது.

chandrababu naidu in kuppam2 - 2026

அப்போது ஒரு விவசாயி தன் பிரச்சனையை சொல்ல தொடங்கினார். அதுதான் சந்திரபாபுவுக்கு அதிர்ச்சி அளித்ததாக மாறியது. தன்னிடம் லஞ்சம் வாங்கிய விஷயத்தை அந்த விவசாயி குறிப்பிட்டார் .

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சென்ற அரசாட்சியைக் குறித்து அவர் பேசினார். ஆனால் ஜெகன் அரசாங்கத்தை இக்கட்டில் மாட்ட வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்த சந்திரபாபு நாயுடு அந்த விவசாயிடம் இது ஜெகன் ஆட்சியில் நடந்தது தானே என்று கேட்டார் . ஆனால் அங்கிருந்த அனைவரோடும் கூட சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அந்த விவசாயி கூறியது அமைந்தது.

அதனை மூடி மறைப்பதற்கும் பூசி மெழுகுவதற்கும் முன்னாள் முதல்வர் பட்ட சிரமம் வைரலாக மாறி சோசியல் மீடியாவை சுற்றிவருகிறது.

chandrababu naidu in kuppam1 - 2026

வெங்கடேஸ்வரலு என்ற விவசாயி தன்னுடைய நிலத்தை ஆன்லைன் செய்வதற்காக ஒரு லட்ச ரூபாயை லஞ்சமாக கொடுத்தாராம். இந்த விஷயத்தை அவர் சந்திரபாபு நாயுடுவிடம் அந்த கூட்டத்தில் எடுத்துரைத்தார். தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் தவறுதலாக அது ஜகன் ஆட்சியில் நடந்தது என்று நினைத்துவிட்டார். அதனால் அந்த விவசாயிடம் அந்த பிரச்சனையைப் பற்றி விவரமாக கேட்டுக் கேட்டு அறிந்து கொண்டார். கூட்டத்தில் அனைவரும் கேட்டுக்கொண்டு இருக்கையில், “சார் அநியாயம் நடந்ததது, சார்” என்று அந்த விவசாயி தன் முறையீட்டை விவரித்தார் .

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

ஒரு லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுத்தேன் சார் என்றார்.

சந்திரபாபு யார்? எந்த ஊர்? என்ன? என்றெல்லாம் கேட்டு அறிந்தார். “ஒன்பி ஆன்லைன் செய்வதற்காக அந்த பணத்தை லஞ்சமாக கேட்டாங்க ஐயா. கொடுத்தேன் ஐயா!” என்று அந்த விவசாயி பேசிக் கொண்டிருக்கும் போதே சந்திரபாபு, “பார்த்தீங்களா? இந்த ஆட்சியின் லட்சணத்தை?” என்று கூட்டத்தை பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

உடனே அந்த விவசாயி, “தெலுங்கு தேசம் கட்சியின் அரசாட்சியின் போது தான் சார் கொடுத்தேன்!” என்று சொன்னாரே பார்க்கலாம்….! அந்த விவசாயியின் பதிலைக் கேட்டு கூட்டத்தில் எல்லாரும் வாயடைத்துப் போயினர்.

chandrababu naidu in kuppam - 2026

சந்திரபாபு அதனைப் பூசி முழுகி, “தெலுங்கு தேசம் ஆட்சி காலத்தில் கூட இப்படி நடந்ததா? அப்பொழுதே ஏன் உடனே என்னிடம் தெரிவிக்கவில்லை?” என்று கேட்டார்.

“அப்போதே என்னிடம் சொல்லி இருக்கலாமே!” என்றார் சந்திரபாபு நாயுடு.

அதோடுகூட, அதிகாரிகளில் சிலர் திருடர்கள் இருப்பார்கள் என்றும் மக்கள்தான் கவனமாக இருக்கவேண்டும் என்றும் சொல்லி கவர் செய்வதற்கு முயற்சி செய்தார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

ஒய்எஸ்ஆர் கட்சி ஆதரவாளர்களுக்கு இது பண்டிகைக் கொண்டாட்டமாக மாறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending