jagan friend sriram - 2026

ஆந்திரா முதல்வர் ஜெகனுடைய பிளக்சியைக் கட்டும்போது மின்சாரம் பாய்ந்து ஜெகனின் சிறுவயது பள்ளித் தோழர் காலமானார்.

ஆந்திரா முதலமைச்சர் ஜெகனோடு சேர்ந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பிளக்சியாக தயாரித்து அவருடைய பள்ளித் தோழர் அதனை மாடியில் இருந்து கீழே தொங்க விடும் போது மின்சாரம் தாக்கியதால் மரணமடைந்தார். இந்த சம்பவத்தில் இன்னொருவர் கூட மரணமடைந்தார்.

ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது உள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் அவருடைய பள்ளித் தோழரோடு கூட இன்னொருவரும் உயிரை விட்டார். இந்த சோக சம்பவம் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபல்லியில் நடந்துள்ளது.

அனகாபல்லி நகரத்தில் உள்ள ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஏடித ஜெகதீஷ் என்பவர் சிறுவயதில் ஜெகன்மோகன் ரெட்டியோடு சேர்ந்து ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலில் படித்தார். அவருக்கு ஜெகன் என்றால் மிகவும் விருப்பம், அன்பு, அபிமானம்.

jagan friend sriram1 - 2026

அண்மையில் ஒய் எஸ் ஆர் சி பி தலைவர் ஜகன் பாதயாத்திரையை ஆரம்பித்தார். அனகாபல்லியில் அவரை ஜெகதீஷ் சந்தித்தார். சிறுவயதில் சேர்ந்து படித்த போது எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் பாதயாத்திரையில் பங்கு கொண்ட போது சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் சேர்த்து மிகப்பெரும் பிளக்சியைத் தயாரித்தார். அந்த பதாகையை தன் வீட்டின் முன் கட்டுவதற்காக வியாழனன்று மாடி மீது ஏறினார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

அதற்காக அவர் தன்னுடைய தூரத்து உறவினரான முப்பிடி ஸ்ரீனு என்பவரின் உதவியையும் நாடியுள்ளார். இருவரும் பிளக்சி கட்டிக்கொண்டிருந்தபோது ஒரேயடியாக காற்று வீசியதால் அது வீட்டின் முன் இருந்த ஹை டென்ஷன் மின்சார ஒயர் மீது போய் விழுந்தது.

ஹை டென்ஷன் ஒயரில் இருந்து மின்சாரம் இவர்கள் மீது பாய்ந்ததால் இவர்களுக்கு ஷாக் அடித்துவிட்டது. இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றாலும் ஜெகதீஷ் அதற்குள் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். ஸ்ரீனு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்தார்.

ஜகன் பிளக்சியை கட்டும்போது இருவரும் மரணமடைந்ததால் அவருடைய குடும்பங்களோடு சேர்ந்து அனகாபல்லி ஒய் எஸ் ஆர் சி பி ஆதரவாளர்களிடையையும் சோகம் நிலவியது. ஜெகதீஷுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். தனிப்பட்ட காரணங்களால் அவர் மனைவியிடம் இருந்து விலகி உள்ளார் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending