December 12, 2025, 1:17 AM
23.7 C
Chennai

ஹாங்காங்… சீன எதிர்ப்பு நாடுகளுக்கான ‘ஆயுதம்’!

modi china

ஹாங்காங் -ல் சீன ஆதிக்கத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம்…இன்றைய சீன எதிர்ப்பில் இருக்கும் நாடுகளுக்கு வசதியான ஆயுதமாக மாறி இருக்கிறது.

சீனாவில் நடக்கும் கம்யூனிச மாநாட்டில்..ஹாங்காங்-ல் சீன சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கு மேலும் சில கடுமையான சட்டங்களோடு களம் இறங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

[ இங்கு பேசப்படும் ‘சட்டத்தின் ஆட்சி’ என்பது சீன கம்யூனிச அடக்குமுறை சர்வாதிகாரம் என்று அறிக 🙂 ]

ஹாங்காங் -ல் சீன அடக்குமுறையில் இருந்து தப்பித்து வெளியேறுவோர்.. தைவானில் வந்து தங்கலாம் என்று அழைப்பு விடுத்து சீனாவை வெறுப்பேற்றி இருக்கிறது.. தைவான்!

”ஹாங்காங் ..சீனாவில் இருந்து தனித்து இயங்கும் தன்னாட்சி பெற்றதாக இல்லை” என்று அமெரிக்காவின் Secretary of State மைக் பாம்பியோ அறிவித்திருக்கிறார். இதன் மூலம், ஹாங்காங்கை தனித்த entity என்பது போல காட்டி.. அமெரிக்காவுடன் வர்த்தக முதலீடுகள் / வாய்ப்புகள் என்று சீனா அனுபவித்துக் கொண்டிருந்த வர்த்தகத்தை காலி செய்திருக்கிறது அமெரிக்கா !

அமெரிக்க -சீன போட்டிக்கு இடையில் ..இரு நாடுகளுக்கும் இந்தியாவின் தெளிவான நிலைப்பாடு /ஆதரவு/ சாய்வு தேவைப்படுகிறது.

அதற்கு சீனா..லடாக் எல்லை பிரச்சினை மூலம் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து..மோடி அரசு பணியவில்லை என்றவுடன் என்றதும்…இந்திய யானையும், சீன ட்ராகனும் இணைந்து நடனமாடும் என்று தற்காலிகமாக பின்வாங்கி பதுங்கி விட்டது சீனா!

சீன ட்ராகனின் தலை மீது ஏறி இந்திய யானை ஆடும் சிவ தாண்டவம் என்று எண்ணிப்பார்த்தால் நன்றாகத்தான் இருக்கிறது ! ! 😀

அமெரிக்கா ..லடாக்கில் இந்திய-சீன எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதாக கூறி நுழையப் பார்க்கிறது. இதன் இன்னுமொரு முயற்சி தான் …டிரம்ப் கூறி இருக்கும் ” PM Modi not in good mood over Ladakh standoff with China ”

சீனாவின் மீது மோடி காட்டத்தில் இருக்கிறார் என்று இந்திய பிரதமரை நேரடியாக குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் கூற வேண்டிய நிலையில் இருப்பது …மோடியை உள்ளிழுத்து விடும் முயற்சி.

இதற்கு இந்தியா…”இந்திய அரசும், இந்திய ராணுவமும் …அவர்களுக்கே உரிய நிதானத்துடனும், ராஜீய பார்வையோடும் இப் பிரச்சினையை அணுகி தீர்த்துக் கொள்வார்கள் ” என்று நாசுக்காக பதிலளித்து..நாட்டாமை அமெரிக்காவை தடுத்து விட்டது.

அமெரிக்க -சீன சண்டையில் …இந்தியா, தனக்கு பயனளிக்கும் வகையில் மட்டுமே இயங்கும் என்று உணர வைத்திருக்கிறார் பிரதமர் மோடி.

தைவான் விஷயத்தில் …இந்தியாவின் வாக்கு யாருக்கு? என்பதை இன்னும் சில மாதங்களுக்கு தள்ளிப்போட வைத்ததன் மூலம்.. சஸ்பென்ஸில் வைத்திருப்பது, சீனாவிற்கு எதிரான நேரடியான எந்த அறிக்கைகளும் இன்றி….தைவான், ஹாங்காங் உடன் உறவை பேணுவது, ஈரான், UAE, ஆஸ்திரேலியா , ஜப்பான் உடன் உறவை பேணுவது என்று …உலக அரசியலில், பூகோள அரசியலில், பிராந்திய அரசியலில், எண்ணை அரசியலில், கடல் வழி அரசியலில்….இந்தியா …பிரமிக்கத்தக்க வகையில்..இந்திய நலனை மட்டுமே முன்வைத்து.. ராஜீய விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது.

டிரம்ப் -ம், Xi-ம் தங்களுடைய வல்லரசு mightiness காண்பித்து அழுத்தம் கொடுக்க…இந்திய பிரதமர் மோடியோ தன்னுடைய ராஜீய நகர்வுகளால் ..அழுத்தங்களை அவர்கள் பக்கமே திருப்பி அடிக்கிறார்.

அமெரிக்க -சீன சண்டையும், அதில் இந்தியாவின் / Modi-யின் பிரமிக்கத்தக்க வகையிலான அதி சுவாரசிய சதுரங்க ஆட்டமும் நடந்து கொண்டிருக்கிறது.

Modi – Statesman extraordinaire , Diplomat par excellence

  • பானு கோம்ஸ் (Banu Gomes)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

Topics

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

தென்காசி டூ காசி… அகத்திய முனிவரின் 9 நாள் வாகனப் பயணம்!

அகத்திய முனிவரின் வாகனப் பயணம் 9 நாள் யாத்திரையை வெற்றிகரமாக முடித்து காசியை அடைந்தது.

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

Entertainment News

Popular Categories