வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பி… பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்!

தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
whatsapp spy
whatsapp spy

வாட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் பயனர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி அவர்களிடம் இருந்து வெரிஃபிகேஷன் கோட்களை அபகரிக்கும் மோசடி கண்டறியப்பட்டுள்ளது

வாட்ஸ்அப் நிறுவனம் செயலியை பயன்படுத்தி பயனர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யாது; மாறாக சமூக வலைதள அக்கவுண்ட் அல்லது வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைப் பக்கத்தின் மூலமாகவே முக்கிய விவரங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது என்கின்றனர் சமூகத் தளத்தில் இயங்குபவர்கள்.

தற்போது, வாட்ஸ் அப் வெரிஃபிகேஷன் கோட் மூலம், வேறொரு புதிய சாதனத்தில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ஆக்டிவேட் செய்ய முடியும். ஆயினும் ஒரு பயனரின் வாட்ஸ்அப் ப்ரோஃபைல் படம் இருப்பதால், விவரம் அறியாத பலர் இதன் மூலமான மோசடியில் அதிகம் ஏமாற வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு போதும் ஒரு பயனரின் விவரங்களை வழங்கக் கோரி அதன் பயனர்களிடம் கேட்காது என்றும், வாட்ஸ்அப் எப்போதும் பயனர்களுக்கு செயலி மூலம் குறுந்தகவல் அனுப்பாது; ஒருவேளை அவ்வாறு குறுந்தகவல் அனுப்பும் பட்சத்தில் பச்சை நிற வெரிஃபைடு மார்க் தெரியும் என்றும் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.