மார்ச் 8: இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது …
“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா..” என்ற மகாகவி பாரதியின் சிந்தனைக்கு ஏற்ப “அன்னையாய், தமக்கையாய், உற்ற தோழியாய், வாழ்க்கை துணையாய் மகளாய் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு, உலகம் இயங்க சக்தியாய் ஜீவன் கொடுக்கும் மகளிரைப் போற்றி இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது.
பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்கிற சிந்தனை நம் பாரத மரபில் பண்டைக் காலத்தில் இருந்தே உண்டு. பாரதத்தின் பண்டைய ஞான மரபில் உபநிஷதங்கள் அளித்தவர்கள் பெண்கள் பலர்.
நவீன காலத்திலும்கூட பெண்களுக்கு கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே இன்று பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் பெண் கல்வியின் சிறப்பை எடுத்துரைத்தனர் ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பத்தின் அடுத்த தலைமுறை மட்டுமின்றி அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு அமைகிறது என்பது இதன் கருத்து.
இன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு அடிப்படையாக அமைவது குடும்பத்தில் அளிக்கப்படும் கல்வி மற்றும் சுதந்திரம்.
ஒவ்வொரு வருடமும் பெண்களைப் போற்றும் மகளிர் தின நிகழ்ச்சிகளை பல்வேறு அமைப்புகளும் ஊடகங்களும் நடத்தி வருகின்றன. இந்தமுறை கொரோனா கால நெருக்கடி நிலை காரணமாக இணைய வழி கலந்துரையாடலில் நிகழ்ச்சிகள் பல நடைபெறுகின்றன.
சென்னையை சேர்ந்த பவித்ரம் என்ற தொண்டு நிறுவனம் மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 7 ஞாயிறு அன்று நடத்திய மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி குறித்த இணைய வழி கலந்துரையாடல் தொகுப்பு இது …
தியாக வடிவமாம் பாரதப் பெண்மை!! | மகளிர் தினம் 2021 | ஹரிகதை வித்தகர் சிந்துஜா சந்திரமௌலி விளக்கும் பாரதப் பெண்மையின் தியாக வடிவம்…