அமித் ஷா முன்னிலையில்… பாஜக.,வில் இணைந்த நடிகை ராதா!

Published:

radha in bjp - 2026

தமிழ் திரையுலக நடிகர் நடிகைகள் பலர் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து வருகின்றனர். நடிகைகள் குஷ்பு, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம், குட்டி பத்மினி உள்ளிட்ட பலர் தற்போது பாஜகவில் உள்ளனர். அவர்களில் பலருக்கு பாஜகவில் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன

தற்போது பாஜகவில் இணைந்துள்ள நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார் நடிகை ராதா. பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின் கமல்ஹாசன் ரஜினிகாந்த் சத்யராஜ் பிரபு சிவாஜி கணேசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ராதா

நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் முன்னிலையில் நடிகை ராதா தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

radha 1 - 2026

அவர் வரும் தேர்தலில் கேரளாவில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே நடிகர் தேவன் நேற்று பாஜகவில் தன்னை அமித்ஷா முன்னிலையில் இணைத்து கொண்டார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img