Homeகட்டுரைகள்வந்தேறிகளின் வம்பு பிரச்சாரம்; விளைவுகள்... உண்மைகள்! (பகுதி-12)

வந்தேறிகளின் வம்பு பிரச்சாரம்; விளைவுகள்… உண்மைகள்! (பகுதி-12)

goa-inquisition3
goa-inquisition3

Xtians only will be taken to heaven, rest are all sinners and will go to hell. கிறித்துவ மத விசுவாசிகளே சொர்க்கத்திற்கு செல்வார்கள். விசுவாசமற்றவர்கள் பாவிகள். நரகத்தை அடைவார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் மதமாற்றங்கள் மிக மிக அதிகமாகிவிட்டன. புது மதத்திற்கு  மாறியவர்கள் நம் கோவில்களை துவம்சம் செய்கின்றனர். நம் கலாச்சாரத்தில் இருந்து விலகிச் செல்கின்றனர். நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வதை நிறுத்திவிட்டனர். பேசும் மொழி கூட மாறிவிட்டது.

சுவாமி விவேகானந்தர் கூறினாற்போல, “ஒரு மனிதன் மதம் மாறிச் சென்றால் நம் மதத்தவரில் ஒரு எண்ணிக்கை குறைவது மட்டுமே அல்ல. நமக்கு ஒரு எதிரி உருவாகிறான்”. இது சத்தியம்.

மத மாற்றங்களினால் சமுதாயத்திலும் குடும்பத்திலும் அமைதியின்மை பெருகுகிறது. “தஸ்மாத் ஜாக்கிரத!”.
சர்வ மத சமரசம்:ஒருவருக்கு தெய்வமாகத் தெரிவது வேறொருவருக்கு பேயாகத் தெரிகிறது (One man’s god is another’s devil) என்ற கூற்றை சனாதன தர்மம் நிராகரிக்கிறது. 

கீதையில் பகவான் கூறுகிறார்: யோ யோ யாம் யாம் தனும் பக்த: ஸ்ரத்தயார்சிது மிச்சதி !தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம் !! ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதன மீஹதே !லபதே ச தத: காமான் மயைவ விஹிதான் ஹிதான் !! (7-21/22) 

எந்தெந்த பக்தன் எந்தெந்த கடவுள் வடிவத்தை சிரத்தையோடு பூஜிக்க விரும்புகிறானோ அவ்வவனுடைய அந்த சிரத்தையை நிலையானதாக நான் செய்கிறேன். சிரத்தையோடு கூடியவாகிய அவன் அந்த கடவுளை வழிபட்டு அதனின்று தான் கோரிய பலன்களை அடையப் பெறுகிறான்.

goa-inquisition2
goa-inquisition2

ஆயினும் அவற்றை உண்மையில் வகுத்து வழங்குபவன் நானே யேsப்யன் யதேவதா பக்தா யஜந்தே ஸ்ரத்தயாsன் விதா: !தேsபி மாமேவ கௌந்தேய யஜஸ்த்வ விதிபூர்வகம் !! (9/23)

அர்ஜுனா! சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வணங்கும்போதும்     என்னையே வணங்குகிறார்கள். ஆனால் அவர்கள் என்னையே வணங்குகிறார்கள் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியாது.

பகவத் கீதையில் போதிக்கப்பட்ட இந்த பரந்த மனப்பான்மையோடு கூடிய  கண்ணோட்டம் இந்தியர்களின் இதயத்தில் மிகவும் திடமாக ஊறிப்போன காரணத்தால் நம் நாட்டில் கடவுள் விஷயத்தில் கலகங்கள் ஏற்படாது. ஹிந்துக்கள் இயல்பாகவே செக்யூலர்களாகவே இருப்பார்கள். அதற்கு மாறாக பிற நாடுகளில் தம் கடவுளை நம்பாதவர்கள் கொல்லப்படவேண்டும் என்று மத நூல்களில் எழுதப்பட்டுள்ளதால் பிரபஞ்சம் குருதி சிந்துகிறது. 

மூட மதங்கள்:10- 7 -2017 ல் இண்டியன் எக்ஸ்பிரஸில் ஒரு செய்தி இடம் பெற்றது. காகிநாடா அருகில் கடப்பாவைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தன் அம்மா சித்தி இருவரோடும் சேர்ந்து தூக்கில் தொங்கிய சோகச் செய்தி அது. ‘பிரபுவின் சந்நிதிக்குச் செல்கிறோம். இந்த பாவிகளின் உலகத்தில் நாங்கள் வாழ இயலாது’ என்று அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தது.

goa-inquisition
goa-inquisition

அதற்குக் காரணம் கிறித்துவ மத பிரச்சாரகர்களின் போதனையே!“இந்தியர்கள் எத்தனை நல்லவர்களாக இருந்தாலும் மிகவும் துரதிருஷ்டம் பிடித்தர்கள். ஏனென்றால் அவர்களது அவிசுவாசிகள். உபயோகமற்ற கடவுளை வழிபடுகிறார்கள். அதனால் நிச்சயம் நரகத்துக்குச் செல்வார்கள்” அமெரிக்காவில் உள்ள இல்லியனாய்சை சேர்ந்த டாக்டர் க்ரேக் என்பவரின் இந்த கூற்றுக்கு ஆதாரம் பைபிள்: மார்க்-9, மாத்யு-  13, ரெவலேஷன்- 14.

கோவாவில் நடந்த கோரங்கள்: ஜேவியர் என்ற மத வெறியன் மூலம் 16 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் கோவாவில் அடி எடுத்து வைத்தது. பெரிய அளவில் மதமாற்றம் நிகழ்ந்தது. 280 முக்கியமான ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டன. சர்ச்சுகளாக மாற்றப்பட்டன. உள்ளூர் மொழியான கொங்கணிக்கு தடை விதிக்கப்பட்டதோடு கூட கொங்கணி மொழியில் இருந்த நூல்களை கொளுத்தும்படி ஆணையிடப்பட்டது.

ஹிந்துப் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் தூண்டப்பட்டன. இந்து சம்பிரதாய சங்கீதத்துக்கு தடை விதித்தார்கள். திருமணங்களை கொண்டாட்டமாக நடத்துவதன் மீது கட்டுப்பாடுகள் விதித்தார்கள். சுபகாரியங்களுக்கு தடை விதித்ததோடு மரணச் சடங்குகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்தார்கள் அந்தத் தீயவர்கள்.

இந்து பெயர்களின் மீதும் இந்திய  உடை அணியும் வழக்கத்தின் மீதும் தடை விதிக்கப்பட்டது. இறுதியில் வீடுகளில் துளசிச் செடி வளர்ப்பதை குற்றமாகக் கருதும் அரசாட்சியாக விளங்கியது.

இன்றைய  கோவாவின் வடிவதற்கு காரணம் இதுவே. 22- 9-1570லிருந்து கோவாவின் கிருத்துவ ஆட்சியாளர் செய்த ஹிந்துமத எதிர்ப்பு சட்டங்களில் சில மட்டுமே இவை.

அந்த தர்ம துரோகியின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட பள்ளிகளில் ஹிந்துக்களின் வீட்டுப் பிள்ளைகளை படிக்க வைத்தது நம் துரதிர்ஷ்டம். 1947ல் நம் நாட்டிற்கு விடுதலை வந்தது என்று நினைக்கிறோம். கோவா விடுதலை 1962 வரை நடக்கவில்லை. ஆனாலும் அங்கு இன்றுவரை போர்சுகீசிய கலாச்சாரம் என்ற பேய் நிர்வாண தாண்டவம் ஆடிக் கொண்டே இருக்கிறது.

மதமாற்றத்தால் நேரும் அனர்த்தங்கள்:
ஹிந்து மக்கள் தொகை குறைந்த இடங்கள் நம் நாட்டிலிருந்து விலகும். உதாரணத்திற்கு பாகிஸ்தானாக மாறிய இடங்கள் மற்றும் வடகிழக்குப் பிரதேசங்கள் போன்றவற்றில் நிகழும் பாரதத்திற்கு எதிரான போராட்டங்கள். மதம் மாறியவர்கள் நம் பண்பாட்டில் இருந்து விலகுவார்கள் வீட்டில் நம் பண்டிகைகளை கொண்டாட மாட்டார்கள். வாசலில் தோரணம் கட்ட மாட்டார்கள். கோலமிட மாட்டார்கள். உடையிலும் அலங்காரத்திலும் மாற்றம் வரும்.

நம் நாட்டின் மீது இருக்கும் ஏமோஷனல் அட்டாச்மென்ட் போய்விடும். பாரதமாதாவை அன்னையாகப் போற்றுவது கேள்விக்குறியாகும். இந்து கடவுள்கள் மீது துவேஷம் பிறக்கும். கோயில்களை துவம்சம் செய்ய விரும்புவார்கள். அன்று கோவாவில் நடந்தது முதல் இன்று ஆந்திரபிரதேச மாநிலம் பிட்டாபுரத்தில் நடந்தது வரை இதே போல் பலப் பல சம்பவங்கள்.

நம் கடவுளர்களை சாத்தான்களாக, பிசாசுகளாக நினைக்கும்படி கற்பிக்கப்படுவதால் திருப்பதி லட்டு கொடுத்தால்கூட அச்சத்தால் ஏற்க மறுப்பார்கள். தாய்மொழி மீது பற்று குறையும். நம் நீதி வாக்கியங்கள், செய்யுட்கள், பொன்மொழிகள் மீது வெறுப்பு ஏற்படும். ஆங்கிலமே தம் தாய் மொழி என்ற எண்ணம் உண்டாகும். அந்திமக் கிரியைகளில் உடலை எரிப்பதை நிறுத்தி சமாதி கல்லறைகள் அதிகமாகும்.

பூமி மீது இடம் குறைந்து போகும். இறந்த பின்னும் பூமிக்கு பாரமாக மாறுவார்கள். சகிப்பின்மை அதிகமாகும். நம் பூஜை முறைகள், மந்திரங்கள் காதில் விழுந்தாலே தாக்கத் தொடங்குவார்கள். சண்டை சச்சரவுகள் அதிகமாகும்.

மூட நம்பிக்கைகளால் உடல்நிலை கோளாறுகளை விலைக்கு வாங்குவார்கள். சர்ச்சுகளில் தரப்படும் நீரை மருந்து என்று அருந்தி நோய்களைப் பெருக்கிக் கொண்டு மரணித்த உதாரணங்கள் ஏராளம் ஏராளம்.
பாவம் செய்வதற்கு அச்சம் நீங்கும். “கிறிஸ்துவின் பெயரால் நடக்கும் கொலைகள் மன்னிக்கப்படும்” என்று போப் பெனிடிக்ட்-8 கூறியிருப்பதும், சர்ச்சுக்குச் சென்று தம் குற்றத்தை கூறிக் கொள்வதால் செய்த பாவம் போய்விடும் என்ற பொய்க் கூற்றாலும் குற்றங்கள் அதிகரிக்கும்.

goa-inquisition1
goa-inquisition1

பண்பாடின்மை, அரசாங்கத்தை ஏமாற்றும் வழி முறைகள் போன்றவை அதிகரிக்கும். வேலை வாய்ப்புக்காக தாம் மதம் மாறியதை மறைப்பது போன்ற செயல்கள் உதாரணம். தாம் பாவிகள் என்ற எண்ணத்தால் தாழ்வு மனப்பான்மை அதிகமாகும்.

தாமே கிறிஸ்துவை கொன்றதாக சித்திரித்து கூறுவதால் ஒரு குற்ற மனப்பான்மையோடு கிறிஸ்துவன் வாழ்கிறான்.

ஆனால் நம் சனாதன தர்மமோ, “அமிர்தஸ்ய புத்ர:” என்று கூறுகிறது. “மனிதர்களை பாவிகள் என்று அழைப்பதே மகா பாவம்” என்றார் சிகாகோ மகாசபையில் சுவாமி விவேகானந்தர். 
கண்ணியம், நேர்மை இவற்றுக்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் வெகுதூரம். “பிறன் மனைவியை அனுபவி. துரோகம் செய். ஏமாற்று. சதி செய், கொலை செய்” (2-சாமுவேல்:11/6)  

பாரத நாட்டு வரலாற்றில் மகான்கள் உயிர் நீக்கும் போது ஒரு ஜோதி வெளிப்பட்டு மேல் உலகங்களுக்கு பயணிப்பது வர்ணிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு பீஷ்மாச்சாரியார் உயிர் நீத்தபோது இவ்வாறு நிகழ்ந்தது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக பலப் பல மகான்கள் பாரத தேசத்தில் கடவுளை பார்த்துள்ளார்கள். பேசியுள்ளார்கள். லட்சக்கணக்கான ஆண்டுகளாக இந்திய வரலாற்றில் பலப் பல புண்ணிய புருஷர்கள் பிறந்துள்ளார்கள். சாட்சாத் பகவான் நடமாடிய பூமி இது. கடவுள்  பலமுறை இந்த புண்ணிய பூமியில் அவதரித்து பக்தர்களை உய்வித்துள்ளான்.

2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த கிறிஸ்துவம் சொர்க்கத்திற்குப் யார் போவார்கள் நரகத்திற்கு யார் போவார்கள் என்று தீர்மானிப்பதாவது? நடக்கவே நடக்காது.

கடவுளை தரிசித்த ஆன்மீக பக்தர்கள் பலர் பாரத பூமியில் நடமாடிச் சென்றுள்ளார்கள். அப்படிப்பட்ட பக்தர்கள் கிறிஸ்துவுக்கு முன்பே பிறந்தவர்கள். அவர்கள் நரகத்துக்குச் சென்றார்கள் என்ற வாதம் ஆதாரமற்றது, நம்பத்தகுந்தல்ல. ஏமாற்றுத்தனமான கூற்று!

தெலுங்கில்: பிஎஸ் சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன்
(ஆதாரம்: ருஷிபீடம் ஆன்மீக மாத இதழ்)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,117FansLike
376FollowersFollow
70FollowersFollow
74FollowersFollow
3,257FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...