December 7, 2025, 12:04 AM
25.6 C
Chennai

அதிர்ச்சி… 9 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இருமல் டானிக்! என்ன தெரியுமா?

cold syrup - 2025

சாதாரணமாக நாம் வாங்கித் தரும் இருமல் டானிக் குடித்ததால் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப் படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன மருந்து தெரியுமா?

இருமல் மருந்தால் 9 குழந்தைகள் உயிரிழந்ததன் எதிரொலியாக, பல மாநிலங்களில் அந்த மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் அடுத்தடுத்து 9 குழந்தைகள் உயிரிழந்தன. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது குழந்தைகளின் உயிரை பறித்தது, COLDBEST-PC எனும் இருமல் மருந்து என்பது கண்டறியப்பட்டது.

அதில், DIETHYLENE GLYCOL என்‌னும் துணை வேதிப்பொருள் இருந்ததும் அதனால் மருந்தில் விஷத்தன்மை கூடியதும் ஆய்வின் மூலம் தெரியவந்தது. COLDBEST-PC மருந்தை ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள நிறுவனம் தயாரித்தாலும் அதன் வேதிப்பொருட்கள் சென்னையை அடுத்த மணலியில் தயாரிக்கப்பட்டதாகும்.

மருந்து உற்பத்தி தொடங்குவதற்கு முன் வேதிப்பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தாததே உயிரிழப்புக்கு காரணம் என அதிகாரிகள் கூறினாலும் இதுபோன்றவை ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உயிரிழப்புகள் நிகழ்ந்த பின்னர் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் உரிமத்தை திரும்பப்பெற்றது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், ‘வருமுன் காப்போம்’ என்பதை அதிகாரிகள் பின்பற்றாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்படுகிறது.

தற்போது, தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் COLDBEST-PC மருந்தின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைனில் கிடைக்கக்கூடிய வாய்ப்பிருப்பதால் ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் என மருந்து விற்பனையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

coldbest syrup - 2025

இதனிடையே, மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்…

அனைத்து மாவட்ட தலைவர்/செயலாளர்/பொருளாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், அனைவருக்கும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பாக அறிவிப்பு கடிதம் – அவசர செய்தி!
ஜம்மு-கஷ்மீர் மருந்து கட்டுப்பாட்டு துறையிலிருந்து அனுப்பிய ஒர் சுற்றறிக்கை நமது மருந்து கட்டுப்பாட்டு துறையிடமிருந்து கிடைக்கப் பெற்றோம். Coldbest PC Syp என்ற இருமல் மருந்தில் Diethylene glycol என்ற நச்சு கலவை இருப்பதால் குழந்தைகளுக்கு உயிர் இழப்பு ஏற்படுகிற காரணத்தால் மேற்பட்ட மருந்துகளை வாங்கவோ , விற்கவோ கூடாது என இதன் மூலம் கேட்டு கொள்கிறோம். .. என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories