Homeஉரத்த சிந்தனைசகிப்புத்தன்மையற்ற வெறுப்புகளை இனியும் சகிக்கக் கூடாது!

சகிப்புத்தன்மையற்ற வெறுப்புகளை இனியும் சகிக்கக் கூடாது!

hinduvoice1
hinduvoice1

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் அன்மையில் என்னோடு பேசும் போது, “ஒரு பெண் நோயாளி என் கிளினிக்குக்கு தன் தந்தையை உடன் அழைத்துக்கொண்டு வந்தார். தன்னுடைய நோயின் விவரங்களை பற்றி என்னோடு கலந்தாலோசித்த பின் உடனடியாக தந்தையை அங்கேயே விட்டுவிட்டு திடீரென்று எழுந்து வெளியே சென்று தன் காரில் அமர்ந்து கொண்டார்.

இந்த அவசர செயல் எதற்காக என்று விசாரித்தபோது என் கிளினிக்கில் ஹிந்து தெய்வங்களின் படங்களை பார்த்தால் அவருக்கு எரிச்சல் ஏற்படுகிறதாம். அதைத் தாங்க இயலாமல் சென்று விட்டதாகத் தெரிவித்தார். உண்மையில் சில நாட்கள் முன்பு வரை அவர் ஹிந்துதான். மதம் மாறியதிலிருந்து அப்படிப்பட்ட மனநிலை ஏற்பட்டுவிட்டது.

ohm
ohm

இது போன்ற சம்பவங்கள் எத்தனை எத்தனையோ!

இந்து தெய்வங்களின் விக்கிரகங்களை உடைப்பது, கோவில்களைத் தாக்குவது, சனாதன தர்மத்தை அவமதிப்பது, மக்களை அடித்து இம்சை செய்து மதம் மாற்றுவது போன்றவையும் நடந்துவருகின்றன.

வீட்டிற்குள் புகுந்து மதமாற்றம் செய்வதற்கு தாக்குதல் செய்வார்களோ என்ற பயமாக உள்ளது என்று ஒருவர் கூறினார்.

ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணி புரிபவர் கூறிய செய்தி இது: எங்கள் அலுவலகத்தில் காலையில் சுத்தம் செய்வதற்காக வரும் பெண் பணியாளர் தங்கள் மேஜேகளின் மேல் அலுவலக ஊழியர்கள் வைத்திருக்கும் அவரவர் இஷ்டதெய்வங்களின் படங்களை எடுத்து டஸ்ட்பின்னில் தூக்கி எறிந்து விடுகிறார். அவரைக் கேள்வி கேட்பதற்கு அனைவருக்கும் பயமே. அட்ராசிட்டி வழக்கின் கீழ் அனைவரையும் மாட்டிவிட்டு சிக்கல் எற்படுத்துவாரோ என்ற பயம் அனைவருக்கும் உள்ளது. அண்மையில் மதம் மாறிய கிளீனர் செய்யும் செயல் இது!

“எங்கள் வீட்டுக்கு வந்த என் சினேகிதிக்கு விருந்தினர் உபசரிப்பின் படி எங்கள் வீட்டில் செய்த புளிசாதத்தை கொடுத்தேன். இது உங்கள் கடவுளின் பிரசாதம் தானே?நாங்கள் தொட மாட்டோம் என்றாள் அவள். எங்கள் வீட்டில் குடிக்கும் தண்ணீர் கூட எங்கள் கடவுளின் பிரசாதம் தான். நீ முதலில் கிளம்பி செல்லலாம் என்றேன் நான்” என்று ஒரு இல்லாள் தெரிவித்தார். ஆனால் அவர்களின் பண்டிகைகளில் கேக்குகளைத் தின்னும் தாராளமான இதயம் படைத்த ஹிந்துக்கள் பலர் உள்ளனர். அவர்கள் மட்டும் ஹிந்து கடவுளின் பிரசாதங்களைத் தின்ன மாட்டார்கள்.

வேறோரிடத்தில் மதமாற்ற சபையில் முக்கியமான உறுப்பினர் ஒருவர், “எங்கள் மதத்தினருக்காக ஒரு நாட்டையோ, ஒரு மாநிலத்தையோ அளியுங்கள். தெலங்காணா அளித்ததைப் போலவே… பாகிஸ்தான் அளித்ததைப் போலவே.. !” என்று தெளிவாகக் கூறிய உடனே சபையில் உள்ளவர்கள் கைதட்டி ஆரவாரித்தனர்.

ஒரு மதம் மாற்றும் கூட்டத்தின் சபையில் முன்பே தீர்மானித்த திட்டத்தின்படி ஒரு பெண் தள்ளாடியபடி வந்து தனக்கு பேய் பிடித்துள்ளதாக நடித்தாள். மேடை மீது இருந்த மதமாற்றும் பெரியவர் பேய் ஓட்டுவதாக நடித்து, உன் பெயர் என்ன என்று கேட்டபோது விஜயவாடா கனகதுர்கா என்று பதிலளித்தாள். உடனே தன் மதத்தின் மத கடவுளின் பெயரால் பேயை ஓட்டிவிட்டதாக மதப் பெரியவர் ஆர்ப்பாட்டம் செய்தார். ஹிந்துக்கள் பக்தியோடு வணங்கும் கடவுளை அவர்கள் பேய் என்று இழிவு செய்யும் போது எதிர்ப்பு தெரிவிக்காத கையாலாகாதாவர்களாக நாம் இருப்பதால்தான் அவர்கள் இவ்வாறு விளையாட முடிகிறது.

உண்மை, அன்பு போன்ற கருத்துக்களைக் கூறும் இந்த மதமாற்றும் கூட்டங்கள் அந்த இரண்டும் இல்லாத கள்ளம் நிறைந்த குழுக்கள் என்று தெளிவாக தெரிந்துதான் இருக்கிறது.

அரசாங்க இட ஒதுக்கீடுகளுக்காக இந்துக்களாக நடித்து இந்துக்களாக இருந்தபடியே தாங்கள் மாறிய மதத்திற்கு பிரச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்றே வியாபார ஆதாயங்களைப் பெற்று பொய் வாழ்க்கை வாழும் இவர்களை அவர்களின் பிரபு மன்னிப்பாரா?

ohm2-1
ohm2-1

வெளிநாட்டு மிஷனரிகளின் மூலம் பின்பக்கமாக சொத்து சேர்த்த படி ‘தசம பாகங்களை’ விழுங்கிக்கொண்டு அக்கிரமமான வசூலுக்கு பழக்கமான அந்த கடவுளின் குழந்தைகள் ஒரு காலத்தில் தாம் இருந்த தம் ஹிந்து மதத்தையும் பழக்க வழக்கங்களையும் கடவுளர்களையும் அவமதித்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த பாவங்களுக்கான சம்பளத்தை அவர்களின் பரலோகத்தில் இருக்கும் பிரபு கட்டாயம் தந்து தீர்வார்.

இவர்களின் செயல்கள் அனைத்திலும் தென்படும் அம்சங்கள்: இவர்களால் பிற மதத்தோடு சேர்ந்து வாழ இயலாது. பிற மதங்களின் மீது சகிப்புத் தன்மை இன்மை. அதோடு வெறுப்பும் தீவிரமாக உள்ளது. பதவிக்காக, அதிகாரத்தை குறுக்கே வைத்துக் கொண்டு தம் மத அரசியலாக மாநிலத்தையும் நாட்டையும் மாற்றும் முயற்சி வெளிப்படையாக உள்ளது. வஞ்சனையையும் ஹிம்சையையும் இயல்பாகக் கொண்ட இந்த தீய மதங்கள் அல்பாயுள் கொண்டவையே ஆனாலும் இவர்கள் செய்துவரும் நாட்டு துரோகமும் கலாச்சார துரோகமும் பயங்கரமாக உள்ளன.

சிலர் தர்ம ரக்ஷணைக்காக, நாட்டு நலனுக்காக போராடி வந்தாலும் அது காட்டில் எழும் குரலாகவே பலவீனமாக உள்ளது. வெளியில் வெளிப்படாமல் உள்ளது. மதம் மாற்றும் மதங்களின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

hinduvoice
hinduvoice

ஹிந்து மதத்தவரின் இதயங்களைத் துளைத்து, நிந்தனை, வெறுப்பு இவற்றையே அடையாளங்களாக கொண்டு மதமாற்றம் செய்துவரும் வெட்கமில்லாத மதங்களுக்கு ஆட்சியாளர்களின் உதவியும் கைகொடுத்தலும் தாராளமாக உள்ளது. காவல்துறை அவர்களை பாதுகாப்பதோடு நீதிக்காக வேண்டிக் கொள்ளும் ஹிந்துக்களை இம்சை செய்து வருகிறார்கள் என்பது கூட செய்திகளில் படிக்கிறோம்.

பிறரை மதம் மாற்றுவதே சொர்க்கத்திற்கு மார்க்கம் என்ற கொள்கையை பிரதானமாகக் கொண்ட மதம் யாரையும் தன்போக்கில் வாழ விடுவதில்லை. அலுவலகங்களில், கடைகளில், பஸ் நிலையங்களில், கல்விக் கூடங்களில், ஆட்டோ, ட்ரெயின் போன்ற வாகனங்களில்… அனைத்து இடங்களிலும் கொரோனா கிருமியை விடக் கொடூரமாக நிறைந்து போய் துண்டுச் சீட்டுகளை விநியோகித்து, போதனைகளைச் செய்துவரும் இந்த மதம் மாற்றும் தொற்றுநோய்க் கிருமிகளின் கொடூரத்தை மீடியாக்களோ அரசியல் கட்சிகளோ கூட கேள்வி கேட்பதில்லை. மேலும் தம்முடைய இருப்புக்காக இவற்றை உற்சாகப் படுத்துகின்றன கூட.

கலாச்சாரம், மொழி, சம்பிரதாயம், அன்பு, தேசிய எண்ணம், பாரம்பரியம் போன்றவை துவம்சம் ஆவதும், மாசு படுவதும் இந்த மதமாற்றங்களின் விளைவே!

வெறும் மதம் காரணமாகவே மாற்றி எழுதப்படும் பன்முகத் தன்மை கொண்ட பாரத தேச சரித்திரத்தை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். இப்போதாவது விழித்துக் கொண்டு ஹிந்துக்கள் மதமாற்றத்திற்கும் வஞ்சனைக்கும் ஆளாகாமல் எழுச்சி கொண்டு போராடாமல் போனால் இதனால் நடக்கும் பரிணாமங்கள் விஷமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

ஹிந்துக்கள் மட்டுமே ஏன் மதம் மாறுகிறார்கள்? இந்த கேள்விக்கு சரியான பதிலை உணரவேண்டும்.

ஜாதி வேறுபாடுகள்தான் காரணமா என்று கேட்டால்… அது சரியல்ல. மதம் மாறிய பின்பும் அவர்கள் சாதியை விடுவதில்லை என்பதே இதற்கு சரியான பதில்.

அனைத்து மதங்களும் ஒன்றே அல்லவா? எந்தக் கடவுள் ஆனால் என்ன? என்ற நம்முடைய பிரமை ஒரு காரணம்.

நம்முடைய சனாதன தர்மத்தின் மீது புரிதல் இல்லாமை என்பது ஒரு பெரிய காரணம். என் மதம் உயர்ந்தது… எனக்குத் தாய் போன்றது! தத்துவச் சிந்தனை, தர்மம், கலாச்சாரம் போன்ற உயர்ந்த கருத்துக்களைக் கொண்டது என்ற தன்மானம் நமக்கு இல்லாமல் போனது மற்றுமொரு காரணம். பெரியவர்கள் தம் பாரம்பரியத்தைத் தாமும் கடைபிடிக்காமல் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்காமல் போனது இன்னொரு காரணம். ஆடம்பரத்திற்கு அடிமையாகி பேராசைக்கு ஆளாகும் பாவச் சிந்தனை முக்கியக் காரணம்.

கல்வி அமைப்பில் நம் கலாச்சாரம், நம் சித்தாந்தங்களின் அறிவு, போதனை இல்லாமல் இருப்பது கூட இவற்றுக்கு உதவி செய்கிறது.

ஹிந்து தர்மத்தை மதித்து கௌரவித்து, நாட்டின் நலனை விரும்பும் ஒவ்வொருவரும் இந்த சந்தர்ப்பத்தில் இதனை இன்னுமொரு விடுதலைப் போராட்டமாக எண்ணி ஒன்றிணைந்து ஒரே குரலில் எதிரொலித்துப் போராட வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்பூர்த்தியை, இந்த சாதனையை, இந்த சாபல்யத்தை பரமேஸ்வரன் இந்து மதத்தினருக்கு அருள வேண்டும் என்று பிரார்த்திப்போம்!

(Source: ருஷிபீடம்- டிசம்பர் 2020- தலையங்கம்)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,800FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள்-ரசிகர்களுக்கு விருந்து..

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டப்படுவதை ஒட்டி படத்தின் பெயர் இன்று வெளியாகியுள்ளது....

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

Latest News : Read Now...