October 16, 2021, 1:23 pm
More

  ARTICLE - SECTIONS

  கொங்கு நாடு… அண்ணாமலை நியமனம்!வெறும் கட்சித் தலைமையல்ல… அதையும் தாண்டி..!

  மென் போக்காளர்களை பதம் பார்க்கும் வகுப்புவாத சிந்தனைகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் போக்கும் அதிகரித்து வருகின்றன

  kongunaadu annamalai - 1

  நிறம் மாறும் தமிழகம்
  கட்டுரை: ஸ்ரீ ராம்


  தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிரிவினைவாத சித்தாந்தங்களையும்….மென் போக்காளர்களை பதம் பார்க்கும் வகுப்புவாத சிந்தனைகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் போக்கும் அதிகரித்து வருகின்றன.

  இந்திய அரசு ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பல செயல்கள் நடைபெறுவதை கவனித்தில் கொண்ட மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தம் ஆகி வருகிறது.

  இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் பாரதப் பிரதமரையும் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களையும் நேரில் சந்திக்க சென்று இருக்கிறார்.

  அநேகமாக தமிழக ஆளுநர் மாற்றப்படலாம் எனும் ஊகங்கள் தற்போதே…. வெளிப்பட ஆரம்பித்து விட்டன. இவர் 2017 ஆம் ஆண்டு தான் இந்த பதவிக்கு வந்தார். அடுத்த ஆண்டு 2022 வரை இவரது பதவிக்காலம் இருக்கின்றது.

  தமிழகத்தின் அரசியல் கோடை காலம் இன்னமும் முடிவடையவில்லை….. அல்லது ஒரு தகிக்கும் சூழலை நோக்கி தமிழக அரசியல் களம் நகர துவங்கி இருக்கிறது. காரணம் …..

  ஒற்றை சொல் ஜெய்ஹிந்த்

  தமிழக மேற்கு மண்டல பகுதியில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தனது ஈனத்தனமான பேச்சினால் சட்டசபையில் வைத்தே ஜெய்ஹிந்த் வார்த்தையை….பகிஷ்கரிக்கும் விதமான பேசினார். இதனை இன்று வரை தமிழக முதல்வர் பொறுப்பு வகிக்கும் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காததோடு அல்லாமல்… சபை கூட்டத்தில் வைத்து ரசிக்கவும் செய்து இருக்கிறார்.

  governor purohit - 2

  இதற்கு எல்லாம் ஆதார ஸ்ருதி ஆளுநர் உரை. அவரது அந்த உரையின் கடைசியில் எப்போதும் போல ஜெய்ஹிந்த் வாசகம் இடம் பெறவில்லை என்பதே பேச்சுப்பொருள் ஆனது.

  நேற்று முன்தினம் கூட பொன்முடி அது என்ன தமிழ் சொல்லா என்று சர்ச்சை கிளப்பி இருந்தார். அந்த வார்த்தையை எந்த தருணத்தில்… யார் முதலில்.. எப்போதும் உபயோகித்தார் என்பது நமக்குத் தெரியும்.

  இத்தனைக்கும் பிறகும் அது மேற்படி நபர்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்தாக மட்டுமே இருப்பதன் காரணம் இவர்களுடைய சர்ச்சாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  சர்ச் என்பதை (search) எனும் ஆங்கில வார்த்தையாக எடுத்து கொண்டாலும் பாதகமில்லை.

  இதனை எல்லாம் நேர் செய்ய மத்திய அரசு நிர்வாகம் யாரும் எதிர்பாராத விதமாக இப்பிரச்சினையை களையும் விஷயத்தை கையில் எடுத்து இருக்கிறது.

  அது……

  தமிழகத்தின் மேற்கு மண்டலமாக திகழும் பகுதிகளை மாத்திரம் யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் வரை போகலாம் என்று குண்டு தூக்கி போட்டிருக்கிறார்கள்.

  nutrino - 3

  யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் இந்த பகுதியை கொண்டு வர பல அடிப்படையான விஷயங்கள் இருக்கின்றன….

  தமிழக மேற்கு மண்டல பகுதியில் கோவை திருப்பூர் ஈரோடு சேலம் மற்றும் நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களோடு கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி ஆகியவை கொங்கு மண்டல மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக…… குறிப்பாக ராணுவ முக்கியத்துவம் உள்ள இடங்களாக மாற்றம் கண்டு வருகிறது.

  கோவை சூலூர் மற்றும் தருமபுரி சேலம் ஒட்டிய நெடுஞ்சாலையில் ராணுவ தொழில்நுட்ப சாதனங்கள் உருவாக்கும் மிகப் பெரிய தொழிற்பேட்டை வரும் நாட்களில் உருவாக இருக்கிறது.

  ஏற்கனவே சூலூரில் இந்திய விமானப் படை தளம் இயங்கி வருகிறது. நாளையே இந்தத் தளம் அரபிக் கடல் பிராந்தியத்தில் நமக்கு வரக்கூடிய இடர்களை களையக்கூடிய விதத்திலான பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு மேம்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இது நேரடியான காரணிகள்.

  மறைமுகமாக இந்த இடங்களில் அன்னிய சக்திகள் வேரூன்றி விடாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. மேற்சொன்ன இடங்களில் எல்லாம் மிஷனரிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ள இடங்களாக கருதப் படுகிறது.

  இங்கு இந்த மண்டலத்தில் தான் உலகிலேயே மிக முக்கியமான நியூட்ரினோ ஆய்வு கூடம் தயாராகி கொண்டு இருக்கிறது. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள இது ஒன்று தான் உலக அளவில் உள்ள ஒரேயொரு ஆய்வு கூடம்.

  மேற்கு தொடர்ச்சி மலையின் கீழே.. 2000 மீட்டர் ஆழத்தில்…. ((இரண்டு கிலோமீட்டர் ஆழம்)) இந்த ஆய்வு கூடம் தற்போது தயாராகி கொண்டு இருக்கிறது.

  இது ஒரு முக்கியமான காரணம் என்றால்….. நாளை நாம் தயாரிக்கப்போகும் ஆறாம் தலைமுறை போர் விமானங்கள் அனைத்தும் இந்தப் பகுதியில் இருந்து தான் தயாரிக்கப்பட இருக்கிறது. அதற்கான முதற்கட்டப் பணிகள் அனைத்துமே முடிவடைந்தது தொழிற்பேட்டை உருவாக தயாராக நிற்கிறது இந்த திட்டம்.

  இப்படிப்பட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் எந்த விதத்திலும் அந்நிய சக்திகள் வேரூன்றி நின்றுவிடாமல் பாதுகாக்க நிலையான ஒரு மாநில அரசு, நாட்டின் பாதுகாப்பை முதல் தேர்வாகக் கருதி மத்திய அரசுடன் இணைந்து செயல்படக் கூடிய வகையில் செயல்படும் நிர்வாகமாக, தமிழகத்தில் இருப்பதை உறுதிப் படுத்த விரும்புகிறது!

  ஆனால் தமிழகத்தில் நடைபெறும் விஷயங்கள் எல்லாம் அதற்கு நேர்மாறாக நடைபெற்ற வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  இவர்களை இயக்குபவர்கள் மிஷனரிகளோ என்று நினைக்கும் அளவிற்கு செயல்பாடுகள் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இவர்கள் தமிழகத்தில் இரண்டு பிரதான இடத்தில் இருந்து இயங்குவதாக நம்பப்படுகிறது. ஒன்று கோவை சுற்றுவட்டாரத்தில்…. மற்றொன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்கள்!

  sulur air base - 4

  சூலூர் விமானப் படை தளத்தின் பகுதியில் மட்டுமே மூன்று நபர்கள் வசம் 790 ஏக்கர் நிலம் இருக்கிறது… விமான தள விரிவாக்கத்திற்கு இடையூறாக செயல் பட்டு வருவதாக உளவுத் துறை அறிக்கை சொல்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும் கூறுகிறார்கள்.

  அதுபோலவே தருமபுரி சேலம் நெடுஞ்சாலை ஒட்டி அமைந்துள்ள இடத்தை சுற்றிலும் சில தனிநபர்கள் அவசர அவசரமாக நிலம் வாங்கி கையகப்படுத்தும் விஷயம் நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள்….. இது கடந்த ஆட்சியின் போதே திட்ட வரையறை செய்த இடங்கள். அதாவது அதிமுக அரசு காலத்தில்….. வாங்குபவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினராகவே …… பெரும் புள்ளி ஒருவரை நோக்கி #கை நீள்கிறது என்கிறார்கள்.

  ravisankarprasad - 5

  இவை எல்லாவற்றையும் சரி செய்யவே, மத்திய சட்டத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ரவி சங்கர் பிரசாத்தை மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது விடுவித்து, தமிழகத்தின் ஆளுநராகக் கொண்டு வர திட்டமிடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

  மனிதர் லேசுப்பட்டவர் இல்லை. வாஜ்பேயி காலத்தில் இருந்தே நம்பிக்கைக்குரிய நபராக…. சிறந்த யூனியன் பிரதேச நிர்வாகியாக… சட்டம் ஒழுங்கு பராமரிப்பு அமைச்சராக… இது எல்லாவற்றுக்கும் மேலாக எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் மற்றும் இன்பார்மேஷன் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவராக, அமைச்சராக இருந்திருக்கிறார்.

  இவர் அயோத்தி ராம் ஜென்ம பூமி வழக்கில் திரு L K அத்வானி சார்பில் கலந்து கொண்டுள்ளார்.

  ABVP அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் உறுப்பினராகவும் இருந்தவர். RSS காரர். இவற்றை தவிர வேறு என்ன வேண்டும்…?! என்ற ரீதியில் இவரை மத்திய அரசு நிர்வாகம் தமிழகத்திற்கு கொண்டு வரும் என்கிறார்கள்.

  தற்போது பதவிக்கு வந்துள்ள தமிழக அரசின் செயல்பாடுகளில் முன் எப்போதும் இல்லாத ஒரு நுணுக்கமான திட்டமிடல் மாற்றம் தெரிகிறது. அது நேரடியாக மத்திய அரசை எதிர்கொள்ளவில்லை… மாறாக 1963 களில் நீர்க்கச் செய்த வகுப்புவாத மற்றும் பிரிவினைவாதக் கொள்கைகளை மீண்டும் தூசு தட்டி மூலாம் பூசி செப்பிடு வித்தை காட்டி வருகின்றனர். இதனை அவர்கள் பாணியில்…. சட்ட ரீதியாக அணுக இது உதவும்.

  மற்றொன்று…… இந்திய கடல் எல்லையில் இருக்கும் இலங்கையில் சீனர்களின் நடமாட்டம் மற்றும் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இது நாளையே நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஏற்பட்டு விடாமல் தடுக்க தமிழகத்தில் நிலைத்தன்மையுடன் கூடிய தேச எல்லைகளின் பாதுகாப்பில் கவனம் கொள்ளக் கூடிய மாநில அரசு நிர்வாகம் இருப்பதை உறுதிப் படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

  எனவே.. இனி வரவிருக்கும் காலங்களில் செயல்பாடுகள் அதிவேகத்தில் இருக்கக்கூடும்!

  கொங்கு மண்டலத்துக்கு மத்திய அரசின் முக்கியத்துவம் அதன் வழியே கூட இருக்கலாம். வானதி, எல்.முருகன், அண்ணாமலை என கொங்கு நாடு மத்திய அரசால் முக்கியத்துவம் பெறுவதும், ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து தமிழகத்தின் அரசியல் கண்காணிப்பாளர் ஆக்குவதற்கென்றே பாஜக.,வின் முக்கியத் தலைவர் பி.எல்.சந்தோஷால் களமிறக்கப் பட்டுள்ள அண்ணாமலை நியமனமும் சொல்வது, வெறும் ஓர் அரசியல் கட்சிக்கான தலைமை நியமனமாகத் தெரியவில்லை என்பதே!

  வளமான தமிழகம்., வலிமையான பாரதம்.. ஜெய்ஹிந்த்!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,141FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,559FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-