~ கே.ஜி. ராமலிங்கம் ~
இன்று வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் பிறந்த தினம்.
உங்கள் மனதுக்கு மன உலைச்சல் தரும் எந்த ஒரு விஷயத்தையும் முக்கியமளிக்காதீர்கள்.
ஏனென்றால் ஆங்கிலத்தில் (psychosomatic disorder) எல்லா நோய்களும் மனம் சார்ந்தது தான் என நிறைய மன நல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
துயரம் கண்ணீராக வெளிப்படாவிட்டால் அதற்காக மற்ற உறுப்புக்கள் கண்ணீர் விட நேரும். இது ஹென்றி மாட்ஸ்லே என்ற ஆய்வர் சொன்னது !
நல்ல மனிதர்கள் படும் வேதனைகள் நிறைய, தன்னை தன் குடும்பத்தை, தேவைகளை மட்டுமே மையமாய் வைத்து வார்த்தைகளை மனிதர்களை உபயோகப்படு்த்தும் மனிதர்கள் நிறைந்துள்ள உலகம் இது.
சுயநலத்தை மையப்படுத்தி இயங்கும் போது எந்த பரிவுகளையும் நாம் எதிர்பார்க்க முடியாது. Needs and wants தாண்டி ஒரு relationship இருந்தால், கொடுத்து வைத்தவர்கள் நாம் தான்.
இன்று யாராவது ஒரு பெரிய மனிதரை சந்திக்க வேண்டும் என்றால் எப்படி என புரியவில்லை. பெரிய மனிதர் என்ற வரையரை புரியவில்லை. ஒரு குழந்தையை குழந்தை என பார்ப்பது போல் (எந்த குழந்தை யென்றாலும் குழந்தை குழந்தை தானே ) பெரிய மனிதரை எப்படி தேர்வு செய்வது ?
படிப்பில் பெரியவரா ? வசதியில் பெரியவரா? புகழ் மற்றும் தகுதியால் பெரியவரா? பணம் நிறய இருந்தும் கல்லூரி மற்றும் அறக்கட்டளை மூலம் சில லட்சங்களை உதவுவதால் பெரியவரா ? மருத்துவத்தில் தேர்ந்தவராய் பல பேர் உயிரைக் காத்த புண்ணியத்தால் பெரியவரா ?
எதை வைத்து பெரியமனிதர் என முடிவெடுப்பது ? குழப்பம் தான் மிஞ்சும்.. அடிப்படை ஒழுக்கம் கருணை, சேவை, மற்றவைகள் நாம் உள்ளத்தில் பெற்றுள்ளவற்றை வைத்து முடிவு செய்யலாம்.
பெரியமனிதர் என நாம் நினைப்பவர்கள் சிலர் குணத்திலே மிக கேவலமாய் இருப்பார்கள். அகத்தே கருத்து புறத்தே வெளுத்து..
அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் தன் ஊரி்ல் குழந்தைகளுக்கு இலவசமாய் பால் அளித்து வந்தார். அவருடய பராமரிப்பில் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் என ஒரு மகான் இருந்தார். வள்ளலார் நெறியில் வாழ்ந்தவர்.
அவர் ஊர் ஊாராய் சென்று வடலூர் வள்ளலார் மடத்திற்காக திருப்பணிகள் செய்து வந்தார். ஒரு சமயம் நடக்க முடியாத சூழ்நிலை வந்தபோது தனியாக வேன் வாங்கித் தந்து உதவியாளரை அமர்த்தி மீண்டும் அவரை பணி செய்ய உதவினார் திரு மகாலிங்கம். அருட்செல்வர் மகாலிங்கம் அவர்கள் மறைந்த ஒரு மாதத்தில் இவரும் மறைந்து விட்டார்.
வள்ளலார் பாணியில் உன்மை தொன்டு புரிந்தவர்கள் என்பதற்கு உதாரனம். தன் பணத்தால் ஒருவரும் தன் கைங்கர்யத்தால் ஒருவரும் உயர்ந்தார்கள்.
Too much informations will make you to suffer from distinguishing between useful and useless informations.
நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி உடம்பையே பாத்துட்டு இருந்ததன் விளைவு,
மனசு வம்பா போச்சு…
எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து
ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..
வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த
ரசம் போல, எந்தப் பக்கம் ஓடுது என்றே
தெரியாமல் ஓடுகிறது.வாழ்க்கை ரசத்தை குடிக்க முடியலையே?
அதிக விஷயம், விஷம்…
இயல்பா இருங்க. வாழ்க்கை யாத்திரை
சுகமான நித்திரையோடு மாத்திரை இல்லாத யாத்திரையாக இருக்கட்டும். ரொம்ப குழம்பித்தான் வள்ளுவர் சொல்லியிருப்பாரோ…
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்
வானுரையும் தெய்வத்துள் வைக்கப்படும் “
இரண்டாவது வரும் தகுதி முதல் வரியில் தான் உள்ளது. எண்ணங்களால் உயர்ந்திட முயற்சிப்போம். நல்லவர்களை தேடுவதை விட்டு நல்லவர்களாக இருக்க முயல்வோம்.