Homeஉரத்த சிந்தனைகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்!

கழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்!

- Advertisement -
- Advertisement -

durai dayanidhi veeramani - Dhinasari Tamil

#ஓசிச்சோறுவீரமணியா? எச்ச சோறுன்னு சொல்லியிருக்கணும்!

டேமேஜ் என்பது கருணாநிதியின் பெயருக்குத்தான்..

தி.க.தலைவர் கீ.வீரமணி சொன்ன ஒரு கருத்துக்காக மு.க.அழகிரியின் மகன் தயா பதில் கருத்தை தெரிவிப் பது நியாயமானதும்கூட.

ஆனால் ஒரு முன்னாள் முதலமைச்சரின் பேரன், ஒரு முன்னாள் மத்திய அமைச்சரின் மகன் என்ற நிலை யில் இருந்து கொண்டு, ஒரு மூத்த அரசியல் தலை வரை, வயது வித்தியாசமே பார்க்காமல் தடித்த வார்த் தைகளால் கொண்டு தாக்குகிற காரியத்தை எப்படி செய்யமுடிகிறது என்பதுதான் வியப்பாக உள்ளது.

ஓசி சோறு என தரை டிக்கெட்டுக்கு பேசுவதை விட்டு விட்டு, ஒரு பெரிய மனிதர் எவ்வளவு தரம் தாழ்ந்து பேசுகிறார் பாருங்கள் என்று அவர் மீதே பாரத்தை போட்டு விட்டிருக்கலாம்.

ஏனென்றால், பல்வேறு நிகழ்ச்சிகளில் பல தலைவ ர்களை அவரோ அவரின் தந்தையோ நேரில் பார்த்து பேசுகிற வாய்ப்புகள் எப்போதுமே அதிகம்..அப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்களிடம் பேசமுடியும்?

முன்பின் தெரியாமல், நேரில் பார்த்து பேசாமல் இருப் பவர்களுக்கும், ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து கொண்டு பல்வேறு தரப்பினரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு..

தயா அழகிரி மட்டுமல்ல, கருணாநிதியின் பேரன், கொள்ளுப்பேரன்கள் வகையறாக்களில் யார் தரம் தாழ்ந்து பேசினாலும், தகாத செயல்களில் ஈடுபட் டாலும் அது அவர்களின் தந்தையை பாதிப்பதைவிடஅரசியல் ரீதியாக கருணாநிதியின் பெயரை குத்திக் கிழிப்பதற்கே அதிகம் பயன்படும்..

பாழாய்போன அரசியலை விட்டுத்தள்ளுங்கள். முத லில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்கள்,

அவர்கள், நம் குடும்பத்து மூத்தோரிடம் எப்படி பழகி னார்கள், நம் மூத்தோர்கள் ஏன் அவர்களிடம் நட்பு பாராட்டினார்கள் என்பதையெல்லாம் ஒரு கணம் யோசித்து பார்க்க ஆரம்பித்தால், இதுமாதிரி தடித்த வார்த்தை பிரயோகங்களோ, துடுக்கான போக்கோ வர வாய்ப்பில்லை..

அப்படியும் வரவில்லையென்றால்.. பெரிய இடத்து சில்லறைகள் என மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியே தீரவேண்டும்

K Selvan வீரமணி போன்ற சுயநல விஷமிகளை வேறு எப்படித்தான் சார் களை எடுக்க முடியும்.
அந்த பையன் பேசியது ஓவர்தான்.
ஆனா இந்த வீரமணிப்பயல் எதுக்கு தேவையில்லாம வாயைக்குடுக்கனும்.
அது அவங்க கட்சி விவகாரம் நான் பேசறது நல்லா இருக்காதுன்னு சொல்லத்தெரியாதவன் பெரியமனுசனா?

Sandheep Kumar அடுத்தவன் குடும்பத்தில் மூக்கை நுழைத்தால் மூக்கு உடைக்கப்படும் என்பது தெரியாதா? வீரமணி என்ன கருணாவின் ரத்த சொந்தமா?

Ganesan Viswanathan தலைவரே “ஒரு மூத்த அரசியல் தலைவரை” என்ற வார்த்தையை படித்தவுடன் தலை கிர்ன்னு சுத்திடுச்சி தலைவரே.
திராவிடர் கழகம் எப்போது அரசிய் கட்சியாக பதிவு செய்யப்பட்டது தலைவரே.
என்னை சற்று ஆசுவாசப்படுத்தி் கொண்டு மேலே படிக்கிறேன் தலைவரே, இனியும் என்னென்ன வகையான புதுபுது முட்டுக்கள் இருக்குமோ இந்த பதிவில் என்ற பயத்தோடு…

Gopal Muthu ஆமா… இதுல பெரிய மனுஷ பெரிய மனுஷனு சொல்றீங்களே அது யாரு

Ganesan Viswanathan “தயா அழகிரி மட்டுமல்ல, கருணாநிதியின் பேரன், கொள்ளுப்பேரன்கள் வகையறாக்களில் யார் தரம் தாழ்ந்து பேசினாலும், தகாத செயல்களில் ஈடுபட் டாலும் அது அவர்களின் தந்தையை பாதிப்பதைவிடஅரசியல் ரீதியாக கருணாநிதியின் பெயரை குத்திக் கிழிப்பதற்கே அதிகம் பயன்படும்.. ”
– கரெக்டுதான் தல “பாவாடை நாடா”, “சிகப்பு மை”, “சூரியன் உதிப்பது இருவருக்குத்தான் பிடிக்காது” என்பன போன்று கருணாநிதி சிலேடையாக தன் அசிங்கமான எண்ணங்களை வெளிப்படுத்தியது போல் வெளிப்படுத்தியிருக்கலாமே என்று மற்றவர்கள் பேசக்கூடும், அதாவது திமுக வின் உண்மையான வரலாறுதெரிந்தவர்கள் பேசும் நிலை வரலாம்.

Dhanabal Subra கருணாநிதி இதைவிட மட்டரகமான முறையில் பிறரை விமர்சித்து இருக்கிறார்..

இதை படிக்கும் இன்றைய தலைமுறையினர் ‘கருணாநிதி மாற்று கட்சியினரை நாகரிகமான முறையில் விமர்சித்து இருக்கிறார்’ என தவறாக அல்லவா புரிந்துகொள்வார்கள்!

Karunanithi Appayan செயல் தலைவர் முதலில் இந்த மாதிரி எக்ஸ்ட்ரா லக்கேஜ் களை கழட்டி விடுவது அவரது பயணத்துக்கு நலம் பயக்கும்

Leo Mady திருமங்கலம் தேர்தல் வெற்றிக்கு பின்னர் அறிவாலயத்தில் விழா. தலைமை கருணாநிதி, வாழ்த்து அன்பழகன். பென்னாகரத் தேர்தல் வெற்றியோடு கொலை வழக்கையும் கர்நாடக கோர்ட்டில் முடித்துக் கொண்டனர். ” ஒரு கொலைகாரன்” எனறு பத்திரிக்கையாளர் துவங்கும் முன்னர் “யார்டா கொலைகாரன், நீ தான்டா கொலைகாரன்” என்று கருணாநிதி பாய்ந்தார்.

தோல்விக்குப் பின்னர் தான் அழகிரி ஒதுக்கி வைக்கப்பட்டார். இப்போது நல்லவர் வேசம் போடுபவர்கள் வெற்றி பெற்றால் எல்லா கொலைகளையும் திராவிட வெற்றி என்று கொண்டாடுவார்கள். – elango

Alagar Samy வீரமணியின் வயது கூடியிருக்கிறதே தவிர,தரம்…?

Ramana Seenuvasan கருணாநிதி பெத்த புள்ளைய ஒரு மூணாவது மனுசன் விருந்தாளினு சொன்ன எந்த மகனுக்குதான் கோபம் வாராது

Msp Satheesh ஐயானு மரியாதையாதான் சொல்றார்…… எச்ச சோறு மகிச்சரியான வார்த்தை

Kamalanathan Perumal வீரமணியின் பேட்டியின் போது இருந்த உடல்மொழியே அவரது கோபத்திற்கு காரணமாக இருக்கலாம்.வீரமணி பெரியவர் என்று யார் சொன்னது.அவரது செய்கைகள் அப்படி இல்லையே!

– இவை எல்லாம், அழகிரியின் மகன் துரை தயாநிதியின் வாசகத்தால் விளைந்த நற்கருத்துகள். அழகிரியை விருந்தாளி என்று வீரமணி சொல்ல, வீரமணி  ஒரு ஓசி சோறு என்று துரை தயாநிதி சொல்ல, அதுகுறித்த சமூக வலைத்தள விவாதங்கள்தான் இவை.

முன்னதாக,  இரு தினங்களுக்கு முன் கூடிய திமுக., செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்  பட்ட கருத்துகள் இவை…

தந்தை மற்றும் கட்சியின் தலைவரை இழந்து வாடும் தளபதி ஸ்டாலின் இந்த நேரத்தில்தான் மிகவும் தைரியத்துடனும் மன உறுதியுடனும் செயலாற்ற வேண்டும். கலைஞர் எப்போது போவார் என்று எதிர் பார்த்து காத்திருந்து மத்தியிலிருந்தும் மாநிலத்திலிருந்தும் சில வல்லூறுகள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. அதனுடைய வெளிப்பாடுதான் அழகிரியின் பேட்டி.

இந்த நேரத்தில்தான் நீங்கள் சில உறுதியான தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். தற்போது கட்சி தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கின்றது. தலைவரை இழந்ததால் தி.மு.க மட்டுமன்றி அனைத்துக் கட்சியினரின் அனுதாபமும் உள்ளது.

மேலும் கலைஞர் இறந்தவுடன் நீங்கள் செயல்பட்ட விதம் மற்றும் அடக்கம் முடிந்தவுடன் உங்களுடைய பேட்டி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறியது கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களிடமும் தங்களின் செல்வாக்கை பலமடங்கு உயர்த்தி உள்ளது. ஆகவே இந்த நேரத்தில் அழகிரி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நிர்ப்பந்திற்கெல்லாம் அடிபணிந்து விடாதீர்கள்.

அழகிரியை உள்ளே சேர்ப்பதால் ஏற்படும் பலனை விட பாதகங்கள் தான் அதிகம்.
கனிமொழிக்கும் அழகிரிக்கும் கலைஞர் பதவி கொடுத்தது பாசத்தினால்தானே தவிர தன்னுடைய வாரிசாக அறிவிப்பதற்காக அல்ல.

கனிமொழி அதை தக்க வைத்துக் கொண்டார். அதனால் தான் நீங்களே கலைஞரின் பூத உடலை கனிமொழியின் இல்லத்திலும் சிறிது நேரம் வைப்பதற்கு அனுமதி அளித்தீர்கள்.

நீங்கள் நினைத்திருந்தால் கோபால புரத்திலிருந்து நேராக ராஜாஜி ஹாலுக்கு கொண்டு சென்றிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அதிலும் நாகரீகம் காத்தீர்கள். ஆனால் நேர்மாற்றமாக அழகிரி அதிகப்பிரசிங்கித்தனமாக நடந்து தலைவரின் வெறுப்பை சம்பாதித்தவர்.

கலைஞருக்கு தெரியும் தன்னுடைய அரசியல் வாரிசு யாரென்று.ஆகவே தான் அவர் வாழும் காலத்திலேயே தங்களை நோக்கி தன்னுடைய சுட்டுவிரலை நீட்டி அடையாளம் காட்டிவிட்டு சென்றிருக்கிறார்.

ஆகவே தி.மு.க வின் எந்த தொண்டனும் தங்களை விட்டு செல்லமாட்டான்.
ஆகவே செயல் தலைவர் தலைவராகும் தருணத்தில் தலைமைப்பதவியில் யாரையும் பங்குதாரராக சேர்க்க வேண்டாம்…

கண்ணுக்கெட்டிய தூரத்தில் வெற்றி தென்படுகின்றது. இவரை உள்ளே சேர்த்தால் இந்த வெற்றியில் தன்னுடைய பங்குதான் அதிகம் என்று உரிமை கொண்டாடுவார். அன்று அண்ணா தங்கள் தந்தைக்கு சொன்னதை இன்று நாங்கள் தங்களுக்கு சொல்கிறோம்…

இத்தகைய பின்னணியில் அழகிரி திமுக.,வில் இணைப்பதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் யார்? என்று சில தகவல்களைக் கசிய விட்டுள்ளனர்.

அழகிரியை உள்ளே சேர்ப்பதில் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் முட்டுக்கட்டையாக இருப்பதை அறிந்து கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். அவரது லிஸ்ட்டில் இருக்கும் முக்கியமானவர்கள், எ.வ.வேலு, பொன்முடி, நேரு, ராசா, கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்டோர். இவர்கள்தான் தன்னுடைய வருகைக்குத் தடையாக இருக்கிறார்கள் என்பது அழகிரியின் எண்ணம். மருத்துவமனையிலும் அழகிரியைப் பார்த்துதான், இந்த நிர்வாகிகள் ஒதுங்கிச் சென்றார்கள்… இதில் பெரும்பாலானவர்கள் தமிழை வீட்டுமொழியாகக் கொள்ளாதவர்கள். – என்று ஒரு தகவல் உலா வருகிறது.

இத்தகைய பின்னணியில் கி.வீரமணி, அழகிரியை ஒரு விருந்தாளி ரேஞ்சுக்கு வர்ணிக்க, அதனால் கொதிப்படைந்த அழகிரியின் மகன் துரை தயாநிதி, கி.வீரமணியை ஓசிச் சோறு என்று குறிப்பிட, அவருக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு கி.வீரமணியை ஓசிச் சோறு என்பவர்கள் திமுக.,வுக்கு தண்டச் சோறு என்று தி.க.வில் ஒருவர் குறிப்பிட… சோற்றுப் பிரச்னை இப்போது சமூக ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்து விட்டது.

உலகெங்கும் பிரபலமாகி விடும் கீவீ சேலஞ்ச் விளையாட்டு போல், தரையில் இறங்கி தராதரம் கெட்டு அடிபிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த  கிவீ., சேலஞ்ச் விளையாட்டில்!

- Advertisement -

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,080FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,945FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

புஷ்பா பட பாடலுக்கு இரயிலில் இளைஞரின் அட்டகாசம்! வைரல்!

புஷ்பா திரைப்படப் பாணியில் மும்பை உள்ளூர் ரயிலில் ஒரு இளைஞர் நடந்துக் கொண்டது பயணிகளுக்கு...

அகண்டா: ஓடிடி ரீலிஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி...

Ak: என்ன செஞ்சாலும் வைரல் தான்!

பொங்கல் ரிலீசாக ஜனவரி 13ம் தேதி ரிலீசாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் வலிமை...

குடும்பத்தோடு பொங்கல்.. புன்னகை இளவரசி கூறிய வாழ்த்து!

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. அதனைத் தொடர்ந்து...

Latest News : Read Now...