December 6, 2025, 4:52 AM
24.9 C
Chennai

பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் தலித்துகளும் ஆரியர்களே!

ambedkar e1534995913530 - 2025

பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் தலித்துகளும் ஆரியர்களே!
பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்றால் தலித்துகளும் திராவிடர்களே!

ஆரியப் படையெடுப்பு என்பது அப்பட்டமான பொய் என்று டாக்டர் அம்பேத்கார் நிரூபித்துள்ளார். இதோ அவர் கூறுவதைப் படியுங்கள்.

டாக்டர் அம்பேத்கார் பின்வருமாறு கூறுகிறார்:
எனவே எனது முடிவுகள் பின்வருமாறு:-
1) ஆரிய இனம் என்று எந்த ஒரு இனமும் வேதங்களில் குறிப்பிடப் படவில்லை.

2) இந்தியாவின் மீது ஆரிய இனத்தவர் படையெடுத்தனர் என்பதற்கோ, இந்தியாவின் பூர்வ குடிகளாகக் கருதப்படும் தாசர்களையும் தஸ்யூக்களையும் வென்றனர் என்பதற்கோ வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லை.

3) ஆரியர்களுக்கும் தாசர்கள்-தஸ்யூக்களுக்கும் இடையிலான வேறுபாடு இன ரீதியான வேறுபாடே என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

4) தாசர்கள் தஸ்யூக்களிடம் இருந்து ஆரியர்கள் உடலின் நிறத்தால் வேறுபட்டவர்கள் என்ற கருத்துக்கு வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லை.

“மானுட உடலளவிடும் இயல்” (anthropometry) என்பது மனிதர்களின் இனத்தைத் தீர்மானிப்பதற்கான நம்பத்தகுந்த அறிவியல் என்றால், பார்ப்பனர்களும் தீண்டத் தகாதவர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே என்று அதன் அளவீடுகள் நிறுவுகின்றன.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டத் தகாதவர்களும் ஆரியர்களே.

பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்றால் தீண்டத் தகாதவர்களும் திராவிடர்களே.

(மொழிபெயர்ப்பு: இக்கட்டுரை ஆசிரியர்)

ஆங்கில மூலம்:
My conclusions are:

1. The Vedas do not know any such race as the Aryan race.

2. There is no evidence in the Vedas of any invasion of India by the Aryan race and it having conquered the Dasas and Dasyus supposed to be the natives of India.

3. There is no evidence to show that the distinction between Aryans, Dasas and Dasyus was a racial distinction.

4. The Vedas do not support the contention that the Aryans were different in colour from the Dasas and Dasyus…..If anthropometry is a science which can be depended upon to determine the race of a people….. (then its) measurements establish that the Brahmins and the Untouchables belong to the same race. From this it follows that if the Brahmins are Aryans the Untouchables are also Aryans. If the Brahmins are Dravidians, the Untouchables are also Dravidians…..’

(B. R. Ambedkar, ‘Writings and Speeches’ [Bombay: Education Department, Government of Maharashtra, 1986-1990], Vol. 7, p. 85 and 302-303, quoted in Koenraad Elst’s Indigneous Indians, Agastya to Ambedkar, op. cit., p.410-411).

தமிழில் படிக்க விரும்புவோர் டாக்டர் அம்பேத்கார் பேச்சும் எழுத்தும் தொகுதி-13, பக்கம் 130-ஐப் படிக்கவும்.

ஆக, ஆரிய திராவிட இனக்கொள்கையானது போலியானது, பொய்யானது, கற்பனையானது, இந்தியர்களைப் பிரித்தாள ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மோசடியான கோட்பாடு என்பதை டாக்டர் அம்பேத்கார் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

* நியூட்டன் அறிவியல் மன்றம்

  • கட்டுரையாளர்: இளங்கோ பிச்சாண்டி  Ilango Pichandy 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories