காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 73): மதன்லால் பாஹ்வா!

patel nizam - 2026

மதன்லால் பாஹ்வா தற்போது பாகிஸ்தானில் உள்ள பக்பட்டன் நகரைச் சேர்ந்தவர். மெட்ரிகுலேஷன் பாஸ் செய்தவர். இந்திய கப்பற்படையில் ( ROYAL INDIAN NAVY ) வயர்லெஸ் ஆபரேட்டராகப் பணி புரிந்தவர்.

1946 ஆம் ஆண்டில்,கப்பற்படை பணியிலிருந்து கெளரவமாக விடுவிக்கப்பட்ட பின் அவர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று விட்டார். அதற்கு பிறகு, சில மாதங்கள் கழிந்தபின், பஞ்சாபில்,அவர் வசித்து வந்த பகுதியிலிருந்து ஹிந்துக்கள் அகதிகளாக வெளியேறத் தொடங்கிய போது,அந்த அகதிகளில் ஒருவராக அவரும் பாரதம் நோக்கிப் பயணித்தார்.

கப்பற்படையில் வேலை செய்த போது சிறிது காலம் பம்பாயில் பணியில் இருந்திருந்தபடியால் பம்பாய் அவருக்கு ஒரு பரிச்சயமான ஊர். இதன் காரணமாக, ஒரு அகதியாக 1947 ஜூன் மாத வாக்கில் பாரதத்திற்கு திரும்பிய போது, அவர் பம்பாயை வசிப்பிடமாக தேர்வு செய்தார்.

ஒரு அகதியாகப் பாரதம் நோக்கிப் பயணித்த போது வழிநெடுகிலும் அவர் பட்ட, கண்ட கொடுமையான நிகழ்வுகளைப் பற்றி நாம் ஏற்கெனவே விவரித் துள்ளோம். மதன்லாலுக்கு அப்போது வயது 20.

கட்டையாக குட்டையாக, ஆனால் முறுக்கேறிய முரட்டு உடல் வாகு.ஆழமான பழுப்ப நிற தலைமுடி, சற்றே சிவப்பு நிறமேறிய மீசை. கடினமாக உழைக்கத் தயங்காத மனோபாவம். கோபம் வந்தால், எதிரியை கையோங்கி அடிக்கத் தயங்காதவர்.

ALSO READ:  வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

முரட்டுத் தோற்றத்துடன், போர்குணம் கொண்டவராக இருந்தார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்,யாராவது ஒரு படைத் தளபதி இவரைப் பார்த்தால்,தன் படையில் உடனே சேர்த்துக் கொண்டு விடுவார்.

தான் சந்தித்து கொண்டிருந்த பிரச்சனைகள் காரணமாக உலகத்தின் மேல் கடுங் கோபம் கொண்டிருந்தார். பம்பாயில், இவர் செம்பூர் அகதிகள் முகாமிலிருந்தார்.

செம்பூர் அகதிகள் முகாம் தேவையற்ற பொருட்களை ஒதுக்குப்புறமாக கொட்டி வைப்பது போல் ‘ஒரு மனித வர்க்கத்தையே‘ கொட்டி வைத்த இடமாக இருந்தது.

அங்கு மதன்லால் பஹ்வா ஒரு அடக்க ஒடுக்கமான, சாதுவான அகதியாக இருக்கவில்லை. தினசரி காலையில் பம்பாய் நகரத்திற்குச் சென்று விடுவார்.

அங்குத் தெருத் தெருவாக வேலைத் தேடி அலைவார். அவருடன் அகதியாக இருந்த ஒருவர் தாதரில் ருயுயி கல்லூரியில் (RUIA COLLEGE) ஹிந்தி பேராசிரியராக இருந்த டாக்டர் J.C. ஜெயின் என்பவரை இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த பேராசிரியர் ஹிந்தியில் பல புத்தகங்களை எழுதியிருந்தார்.அவர் தன் புத்தகங்களை வீடு வீடாகச் சென்று விற்பதற்காக ஒரு ஆளை தேடிக் கொண்டிருந்தார். அந்த வேலை மதன்லால் பஹ்வாவிற்கு கிடைத்தது.சம்பளம் கிடையாது.25% கமிஷன் மட்டுமே.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

ஆனால் புத்தங்களை விற்பனை செய்வது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.இரண்டு மாதம் வேலை செய்தும் 50 ரூபாய் மட்டுமே கமிஷன் தொகையாகக் கிடைத்தது.

மதன்லால் பஹ்வா புத்தகங்களை விற்பனை செய்யும் பணியில் இருந்த போது,பம்பாயில் சமூக ஊழியராக பணிபுரிந்து வந்த திருமதி மோதக் என்பவரின் தொடர்பு கிடைத்தது.

அவர் நாடகக் குழு ஒன்றைத் தொடங்க இருந்தார்.அந்த வேலையில் தனக்கு உதவுவதற்காக தன்னிடம் செயலாளராக் சேர்ந்துக் கொள்ளும்படி மதன்லால் பஹ்வாவுடம் கூறினார்.

மதன்லால் பஹ்வா மறுத்து விட்டார். தான் ‘ பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ‘ இறங்கி விட்டதாக மோதக் அம்மையாரிடம் கூறி விட்டார்.

உண்மையிலேயே,MESSRS VASSEN PUSPASEN எனும் அரசு லைசென்ஸ் பெற்று பட்டாசு தயாரித்து வந்த ஒரு தொழிற்சாலையில் மதன்லால் பஹ்வாவிற்கு வேலை கிடைத்தது. ஆனால் பட்டாசு தயாரிப்பு என்பது இந்த தொழிற்சாலையின் வெளித் தோற்றமாக மட்டுமே இருந்தது.

உண்மையில் ரகசியமாக கையெறி குண்டுகளை தயாரிக்கும் இடமாகத்தான் அது இருந்தது. மதக்கலவரங்கள் நாடெங்கும் பரவலாக நடந்து வந்த அந்தக் காலக்கட்டத்தில்,நாட்டு வெடிகுண்டுகளுக்கு நல்ல மவுசு இருந்தது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

குறைந்தது 10 அல்லது 12 கையெறி குண்டு தயாரிப்பு தொழிற்சாலைகளாவது பம்பாயில் இருந்தன. பலமுறை போலீஸ் சோதனைகள் நடத்திய போதும் ,இந்த தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இது போன்றதொரு ‘ பட்டாசு’ தொழிற்சாலையில் தான் மதன்லால் பஹ்வா வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வெடிகுண்டு தயாரிக்கும் மெஷின்களை நேரிடையாக கையாண்டு,வெடிகுண்டுகள் தயாரிப்பதில் பயிற்சியும் அனுபவமும் பெற்றார்.

குண்டுகளை தயாரிப்பது மட்டுமின்றி அவற்றை விற்பனை செய்யும் வேலையிலும் ஈடுபட்டார். இதற்கு,வீடு வீடாகச் சென்று விற்கவே முடியாத டாக்டர் ஜெயினின் புத்தகங்களை விற்பனை செய்வது போன்றதொரு வெளித் தோற்றம் உதவியது.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories