காந்தியை கொலை செய்வது என ஆப்தேயும், நாதுராம் கோட்ஸேயும் முடிவுசெய்த பின் அதற்கான தேதியையும் முடிவுசெய்தனர். ஜனவரி 20 !
அந்த இருவரின் வழக்கமான சுபாவத்தைப் இந்த விஷயத்திலும் காட்டினர்.. அது…. வேறு எதுவும் முடிவு செய்யவில்லை.
எப்படி அந்தக் கொலையை செய்யப் போகிறார்கள், என்ன ஆயுதங்களை பயன்படுத்தப் போகிறார்கள், கொலையில் அவர்களுக்கு உதவுவதற்காக வேறு யார் டெல்லிக்கு உடன் வரப் போகிறார்கள்…… எந்த திட்டமும் இல்லை…!
முதலில் தொடங்கி விடுவோம்… பின் ஆயுதங்களை திரட்டுவது,உதவிக்கு ஆட்களை சேர்த்து அவர்களை ஒருங்கிணைப்பது,அவர்களுக்கான பாத்திரங்களை முடிவு செய்வது என தீர்மானித்தனர்.
அடுத்த வந்த வாரத்தில்…. பூனாவில் …பம்பாயில்… டெல்லியில்..டாக்ஸிகளில்…ரெயில்களில்…பம்பாய் வீதிகளில் …பயணிப்பது போல ….
என அவர்களின் சிந்தனையை ஓட விட்டு …இப்படி செய்யலாம்…அப்படி செய்யலாம்… என பல கரங்களை கொண்ட ஒரு பிரம்மாண்டமான அசுரனை தங்கள் கற்பனையில் உருவாக்கி விட்டனர்.
ஒரு மனிதனை கொல்வது எனும் தீர்மானம் பலரை வெட்டி சாய்ப்பதற்கு தயாராக இருக்க வேண்டி இருக்கும் என்று எண்ணும் அளவிற்குப் போனது. ஏனென்றால் தாங்கள் காந்தியை கொல்லப் போகும் போது அவரை சுற்றி ஏராளமான பேர் இருப்பார்கள் …
அவர்களின் கதி…. தேவைப்பட்டால் அவர்களும் உயிரிழக்கத்தான் நேரிடும்.. இறுதியாக … 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ந் தேதி….டெல்லி கொனாட் சர்க்கஸ் பகுதியிலிருந்த மெரினா ஹோட்டலில் ஒரு அறையில் ….என்ன செய்வது என்று ஒரு முடிவு எட்டப்பட்டது.
ஆப்தேயும், நாதுராமும் பின்னணியிலிருந்து செயல்படுவது என்றும், மற்றவர்களுக்கு அபாயகரமான முன்னணி வேலைகளும் ஒதுக்கப்பட்டது.
அதற்கு காரணமும் இருந்தது.
முதல் முயற்சி வெற்றி பெறாவிட்டால்..அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக அவர்கள் வெளியே இருந்து…. நினைத்ததை முடித்தே ஆக வேண்டும் ! அந்த அபாயக்கரமான முன்ன்ணி வேலையில்… பாட்கேயின் வேலையாள் ஷங்கர் கிஷ்ட்டய்யா கைகளிலும் கூட ஒரு பிஸ்டல் !!
அப்பாவி அந்த ஷங்கர் கிஷ்ட்டய்யா… அவனுக்கு காந்தி யாரென்றே தெரியாது… அவர் என்ன செய்தார் என்பதே தெரியாது… ஏன் அவன் அவரை சுட வேண்டும் என்பதும் தெரியாது… அப்படி செய்து விட்டால்….என்ன விளைவுகள் ஏற்படும் என்பதே தெரியாது….
இந்த சதியோடு தொடர்புடைய … நல்ல காரியம் ஒன்று உண்டென்றால்…அது நாதுராம் செய்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவர் தன் பெயரில் இரண்டு ஆயுள் காப்பீடு பாலிஸிகள் எடுத்து இருந்தார்….3000 ரூபாய்க்கு ஒன்று….2000 ரூபாய்க்கு ஒன்று.. அதற்கான ‘ NOMINEES ‘களை இப்போது நியமித்தார்.
ஜனவரி மாதம் 13ஆம் தேதி காலையில், இன்சூரன்ஸ் கம்பெனிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தன் இன்சுரன்ஸ் பாலிஸிகளின் பயனாளிகள்…. ஒன்று, தன் சகோதரர் கோபால் கோட்ஸேயின் மனைவி சிந்து; மற்றொன்று நாராயண் ஆப்தேயின் மனைவி சம்பா என குறிப்பிட்டிருந்தார்.
ஏன் ஆப்தேயை பயனாளியாக நியமிக்கவில்லை என்பது புரிந்த விஷயம். ஆனால் நாதுராமிற்கு தெளிவாக தெரிந்திருந்தது…
தனக்கும்,ஆப்தேயிற்கும் எந்த அளவிற்கு ஆபத்துக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறதோ, அதே அளவிற்கு , தன் தம்பி கோபால் கோட்ஸேக்கும் ஆபத்துக்கள் காத்திருக்கிறது என்று…..
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்