காதலர் தினம் என்ற மொழிபெயர்ப்பின் பின்னணி சதி

உரத்த சிந்தனை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

வாலன்டைன்ஸ் டே எனப்படும் பிப்ரவரி-14 வணிகக் கேளிக்கைக் கொண்டாட்டத்திற்கு தமிழில் காதலர் தினம் என்று பெயர் சூட்டி விளம்பரம் செய்ததே ஒரு கிரிமினல்தனமான உத்தி என்று தோன்றுகிறது. இந்தியாவின் எல்லா பெரு/சிறு நகரங்களிலும் இந்த தினம் இப்போது இந்த தினம் பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களிடம் பரவிவிட்டிருக்கிறது தான், ஆனால் மற்ற எந்த இந்திய மொழியிலும் இப்படி ஒரு மொழிமாற்றம் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவில்லை, ஹிந்தியில் வைலேன்டாயீன் திவஸ் (वैलेंटाइन दिवस) தான், ப்ரேம் / ப்ரேமீ திவஸ் எல்லாம் அல்ல. இதேபோலத் தான் கன்னடம், தெலுங்கிலும் அந்தப் பெயரை அப்படியே தான் எழுதுகிறார்.

இதனால் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிடப் போகிறது என்று கேட்கலாம். கட்டாயம் உண்டு. அந்தப் பெயரை அப்படியே கூறும்போது அது தனது மதத்துக்கும், மொழிக்கும் பண்பாட்டுக்கும் அன்னியமானது என்ற பிரக்ஞையாவது இருக்கிறது. ஏன் அந்தப் பெயர் என்று
ஒரு இளைஞன் தேடும்போது அந்தக் கொண்டாட்டத்தின் மேற்கத்திய / கிறிஸ்தவ பின்னணியைத் தெரிந்துகொள்ளும் ஒரு திறப்பாவது இருக்கிறது. இப்படி மொழிமாற்றும் போது, அதற்கான ஒரு வாசல் அடைக்கப் படுகிறது. அந்த நாளின் அன்னியத்தன்மை பெருமளவு மழுங்கப் படுகிறது.

தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வரும் ஒரு ஈனத்தனமான குயுக்தியின் நீட்சி தான் இது. பைபிளை வேதாகமம் என்றும் சர்ச்சை கோயில் என்றும் பாதிரியை ஐயர் என்றும் அழைத்து ஒரு பாட்டம் ஏற்கனவே இதை நடத்தி முடித்தாயிற்று. இப்போது, அருட்பணியாளர் (மிஷநரி), அருட்தந்தை (பிஷப்) என்பது போன்று தமிழ் பக்தி இலக்கியங்களிலிருந்து உருவி எடுத்த சொற்களைப் போட்டு நாளிதழ்கள் மட்டும் ஊடகங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்த காதலர் தினம் சமாசாரமும் அந்த வகையைச் சார்ந்ததே என்று எண்ண இடமிருக்கிறது.

எனவே இந்தச் சொல்லைப் பயன்படுத்துவதை நாம் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

ஸோ, ஸே நோ டூ காதலர் தினம் ஆண்ட் கால் இட் வாலன்டைன்ஸ் டே ஒன்லி (இப்படி சொன்னாத் தான் சேர் செய்யும் பச்சை தமிழனுக்குப் புரியும்)

– ஜடாயு

#காதலர்தினம் #ValentinesDay #வாலன்டைன்ஸ்டே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.