சர்ச்சுல மோடிக்கு ஓட்டு போடக் கூடாதுனு சொன்னாங்க… ஆனா நா போடுவேன்.!

Published:

07 Oct17 dhin Modi - 2026

சர்ச்சுல மோடிக்கு ஓட்டு போட கூடாதுனு சொன்னாங்க ஆனா நா போடுவேன்..

இராமநாதபுரம்: பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் போது எதார்த்தமாக இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கொக்கூரணி கிராமத்தை சேர்ந்த செபஸ்தி அம்மாள் செல்போனில் பேசி கொண்டிருந்த சேதி நம்மை எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியது.

ஏன் மோடிக்கு ஓட்டு போடுவீர்கள்?

எனது பெயர் செபஸ்தி அம்மாள் நான் கொக்கூரணியை சேர்ந்தவள் எனக்கு அருள் என்ற 27 வயதுடைய மகன் இருக்கிறான் எனது கணவர் சிறுவயதிலேயே எங்களை விட்டு விட்டு யேசுவிடம் சென்றுவிட்டார்.

நான் எனது மகனை காட்டு வேலை பார்த்து வளர்த்து வந்தேன் சரியாக 5 வருடத்திற்கு முன்பு எனது மகன் வெளிநாடு அனுப்பிவைத்தேன் அவனும் நன்றாகவேலைபார்த்து பணம் அனுப்பினான் முதல் வருடம் அனுப்பிய பணத்தில் அவன் சிங்கப்பூர் செல்வதற்கு வாங்கிய கடனை கட்டினோம் இரண்டாவது வருடம் அவன் அனுப்பிய காசை சேத்துவெச்சு சிறிதாக வீடுகட்ட ஆரம்பித்தோம் ஆனால் எங்கள் நேரமோ என்னவோ தெரியவில்லை

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

மகன் வேலை இழப்பு

எனது மகன் கட்டிட வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது சாரம் சரிந்து கீழே விழுந்துவிட்டான் ,அவ்வளவுதான் மீண்டும் நாங்கள் பழைய நிலைக்கே சென்றுவிட்டோம் நீண்ட நாளுக்கு பிறகு எங்களுடன் வந்த சொந்தங்களும் எங்களை தனியா விட்டுட்டு போயிட்டாங்க நிறுவனம் தந்த பணம் எனது மகனின் வைத்தியத்திற்கே பத்தவில்லை

மோடி உதவி

ஆரம்பித்த வீடு பாதியில் நின்றாள் அதன் கஷ்டம் அந்த மக்களுக்கு தான் தெரியவரும் தினமும் அதனை பார்க்கும் போது அழுத்துருவேன் என் மகனும் கண்ணீர் விட்டுருவான் சொந்தம் பந்தம் அண்ணன் தம்மி எல்லாரிடமும் உதவி கேட்டும் ஒருதரும் உதவவில்லை.

நான் குறுக்கிட்டு ஏன் உங்கள் மகன் அடுத்து வெளிநாடு போகலையா என்று கேட்க அவன் குதிகாலு அடிபட்டதால் கிந்தி கிந்தி தான் நடப்பான் அதனால் வேலைக்கு செல்லமுடியாது என்று அழுதுவிட்டார் ஆறுதல் சொல்ல மேலும் தொடர்ந்தார் கட்டுன வீடு அஸ்திவாரம் போட்டதோட நிக்குதே என்று நானும் மகனும் அழுகாதா நாள் இல்லை அன்றுதான் டிவி விளம்பரத்தில் மோடி வீடு பத்தி போட்டாங்க அப்போதான் என் மகன் இதுக்கு பதியலாமா நமக்கு கிடைக்கும் சொன்னான் நான் நம்பள அவன்தான் போனான் பதிஞ்சான் .

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

வீடு வந்தது

சொந்த பந்தம் 10000 ரூபாய் காசு எங்களை நம்பி கொடுக்காதப்போ மோடி அரசு எங்களுக்காகவீடே கட்டி கொடுத்தாங்க நாங்க இப்போ எங்க சொந்த வீட்டுல இருக்குறோம் சொந்த வீட்டோட அருமை வீடு இல்லாதவங்களுக்குதான் தெரியும் யாருமே உதவாதப்போ அந்த மனுசன் தான் எங்களுக்கு உதவுனாரு அவரை மதவெறி புடிச்சவர் அவருக்கு ஓட்டு போடகூடாதுனு நிறைய சொந்தகாரங்க சொல்றாங்க

ஆனா அந்த மனுஷன் உதவலனா கடைசி வரை நாங்க அப்படியே இருந்துருப்போம் இணைக்கு என் மகனுக்கு பொண்ணுகுடுக்க நிறைய பெரு சம்மதிச்சுருக்காங்க அதுக்கு காரன் எங்க வீடுதான் யார் என்ன வேணா சொல்லட்டும் என் ஓட்டும் என் மகனோட ஓட்டும் அந்த மனுஷனுக்கு தான் என்று சொல்லும் போது நமக்கே கண்ணீர் வந்து விட்டது .

தகவல்: வாட்ஸ்அப்பில் வைரலாகும் பதிவு

Related articles

Recent articles

spot_img