ஆரோக்கிய சமையல்: சுட்ட கத்திரிக்காய் சட்னி!

Published:

brinjal - 2026

சுட்ட கத்தரிக்காய் சட்னி

தேவையானவை:
கத்தரிக்காய் – 2 (பெரியது)
சாம்பார் வெங்காயம் – 10 (உரித்தது)
உப்பு – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
புளி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
கொத்துமல்லித் தழை – ஒரு கைப்பிடி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி

செய்முறை:

sutta katrikal satni - 2026

கத்தரிக்காய் தோலின் மீது முழுவதும் எண்ணெய் தடவி சூடான தணலில் சுட்டு எடுத்து ஆறியதும் தோலினை அகற்றவும்.
வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.

அத்துடன் சுட்ட கத்தரிக்காய், பெருங்காயத் தூள், உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பின்னர், கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும். சுவையான சுட்ட கத்திரிக்காய் சட்னி தயார். இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

Related articles

Recent articles

spot_img