குழந்தைகளுக்கு பச்சரிசி பாசி லாடு!

சமையல் புதிது நலவாழ்வு பொது தகவல்கள்
rice moondal urundai - 2026

பச்சரிசி பருப்பு லாடு

தேவையானவை:
பச்சரிசி – ஒரு கப்,
பாசிப்பருப்பு – கால் கப்,
தேங்காய் துருவல் – கால் கப்,
பொடித்த வெல்லம் – அரை கப்,
நெய் – கால் கப்,
சுக்குப்பொடி – தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசி, பாசிப்பருப்பை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் சற்று கொர கொரப்பாக பொடிக்க வும். வெல்லத்தை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கரைத்து வடி கட்டவும்.

பின் பாகு காய்ச்சவும் (பாகை தண்ணீரில் போட்டால் கரையக் கூடாது). இதனுடன் சுக்குப்பொடி, நெய், தேங்காய் துருவல், வறுத்து அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்துக் கிளறி இறக்கி, சூடாக இருக்கும்போதே சிறிதளவு நெய்யை கையில் தடவிக் கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.

குறிப்பு: தேங்காயை சிறுசிறு துண்டுகளாக்கியும் இதில் சேர்க்கலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.