பருப்பு துவையல்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
parupu thuvaiyal - 2026

பருப்பு துவையல்
தேவையான_பொருட்கள்
:
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்,
துவரம் பருப்பு – 5 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 1,
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்,
நெய் – 1/4 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக வறுத்து ஆற விடவும்.

ஆறவைத்தபொருட்களுடன் சிறிது தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும்.

சூப்பரான பருப்புத்துவையல் ரெடி.

இந்த துவையல் பருப்பு சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும் சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் சாப்பிட இந்த துவையல் நன்றாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.