கிரவுண்ட் நட் குருமா!

peanet

கிரவுண்ட்நட் குருமா

தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை – அரை கப் (தோல் நீக்கவும்), வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), பட்டை – ஒன்று,
லவங்கம், ஏலக்காய் – தலா 2,
நெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
அரைக்க:
சோம்பு – அரை டீஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு (தோல் சீவி பொடியாக நறுக்கவும்), பூண்டுப் பல் – 2,
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
கசகசா – ஒரு டீஸ்பூன்.

peanet kuruma

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து, தண் ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். வாணலியில் நெய்விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரைத்த விழுது, வேர்க்கடலை சேர்த்து, அரை கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :