தள தளக்கும் தக்காளி அல்வா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
tomoto halwa 2
tomoto halwa 2

தக்காளி அல்வா

தேவையானவை:
நன்கு கனிந்த நாட்டுத் தக்காளி – அரை கிலோ,
சர்க்கரை – 100 கிராம்,
நெய் – 50 கிராம்,
ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை,
உடைத்த முந்திரித் துண்டுகள் – 3 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு நெய்யில் வறுக்கவும்), ஆரஞ்சு நிற ஃபுட் கலர் ஒரு சிட்டிகை.


செய்முறை:
தக்காளியைப் பொடியாக நறுக்கி, வாயகன்ற பாத்திரத்தில் போட்டு அதனுடன் சர்க்கரையைச் சேர்த்துக் கொதிக்கவிடவும் (துளிகூட நீர் விடத் தேவையில்லை). இடையிடையே நெய்யை சேர்க்கவும். ஃபுட் கலரையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கெட்டியாக வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரியை சேர்க்கவும். பிறகு கீழே இறக்கி, ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

இதை இரண்டு, மூன்று தினங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.