அழகு குறிப்புக்கள்: முடி உதிர்கிறதா சிம்பிள் தான் இத செய்யுங்க!

Published:

darkhair

முடி உதிர்வதை தடுக்க தேங்காய் பால் உதவுகிறது. கூந்தலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

தேவையான பொருட்கள்:

வெந்தயம்.

தேங்காய்ப் பால்.

செய்முறை:

வெந்தயத்தை எடுத்து தேங்காய் பாலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். பின்பு நன்றாக விழுதுப் போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.

கருமையாக முடி வளர :
மாசிக்காய் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனை வாங்கி வாரம் 2 நாட்கள் பயன்படுத்துங்கள். பக்க விளைவுகளில்லாதது.

தேவையான பொருட்கள்:

மாசிக்காய்

பால்

செய்முறை:

மாசிக்காயை எடுத்து பொடி செய்து அந்த தூளை தண்ணீர் அல்லது பாலில் குழைத்து தலை முடியில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலை முடி கருமையாக மாறும்.

Related articles

Recent articles

spot_img