சதுர்த்தி ஸ்பெஷல்: சோயா சங்ஸ் ஸ்வீட் கொழுக்கட்டை

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Screenshot_2020_0818_170621

சோயா சங்ஸ் ஸ்வீட் கொழுக்கட்டை

தேவையானவை: சோயா சங்ஸ் (பெரிய மளிகைக் கடைகளில்கிடைக்கும்). – 20 அல்லது 25, பொடித்த வெல்லம் – முக்கால்கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பச்சரிசி மாவு. – ஒரு கப், உப்பு -ஒரு சிட்டிகை, எண்ணெய். – 4 டீஸ்பூன்.

செய்முறை: சோயா சங்ஸை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து,தண்ணீர் வடித்து உதிர்த்து துளாக்கவும். கடாயில் வெல்லம்,தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லத்தை கரையவிட்டுவடிகட்டி, பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். தூளாக்கியசோயா சங்ஸை இதில் போட்டு, ஏலக்காய்த்தூள் கலந்து,சிறிதளவு எண்ணெய் சேர்த்து, அடிபிடிக்காமல் கிளறிஎடுக்கவும். இதுதான் பூரணம்.

கடாயில் தண்ணீர் விட்டு, உப்பு, கொஞ்சம் எண்ணெய் விட்டுகொதிக்கவிடவும். இதில் பச்சரிசி மாவைத் தூவி கெட்டியாககிளறி எடுக்கவும். ஆறியதும் கட்டி இல்லாது பிசைந்துகொள்ளவும். மாவில் சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல்செய்து, தேவையான அளவு சோயா சங்ஸ் பூரணம் வைத்துமூடவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.