கனவின் விளைவு: இப்படி கண்டால் மணம் ஆகாதவர்களுக்கு மணமாகும்

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream-1

கனவில் காதணிகளைக் கண்டால், பொன் நகைகள் பலவும் தனக்கு உரிமையாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

காய்கறிகளைச் சமைப்பதுபோல கனவு காண்பது, நம்பியவர்களின் நம்பிக்கை மோசடியைச் சுட்டிக்காட்டும்.

காய்கறிகளை உண்பதுபோல கண்டால், பொருள் இழப்பு ஏற்படும்.

காய்கறிகளைப் பறிப்பதுபோல கனவு கண்டால், சண்டை – சச்சரவுகள் உண்டாகும்.

காக்கை கனவில் வருவது கெடுதலானது. தொழில் அல்லது உத்தியோக பாதிப்பு, விரோதிகளின் சூழ்ச்சி, வீண் விரோதம் போன்ற பல தொல்லைகளை சந்திக்க நேரிடும்.

காகம் கரைவதாக கனவு காண்பதும் கெடுதலான காலத்தைக் குறிப்பிடும்.

முதியவர்களைக் கனவில் காண்பது நற்பலன்களை விளைவிக்கும். மிகுந்த செல்வம் வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

தானே கிழவராகிவிட்டாற்போல ஒருவர் கனவு கண்டால், அவருடைய குடும்பநிலை மேம்படும்; சந்ததிகள் பெருகுவர்.

கனவில் கிணற்றைக் காண்பது நல்லதாகும். மணம் ஆகாதவர்களுக்கு மணமாகும். மணம் ஆனவர்களுடைய குடும்பத்தில், வேறு எவருக்கேனும் திருமணம் நடைபெறும்.

கிணற்றில் இறங்கி நீந்தும்போது, நீருக்கு மேலே தலையைத் தூக்கியிருப்பது போல கனவு கண்டால், முயற்சிகள் வெற்றி பெறும்.

மாறாக தலை தண்ணீரில் ஆழ்த்தப்பட்டிருந்தால், வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும் நஷ்டங்களும் உண்டாகும்.

கிணற்றிலிருந்து தண்ணீரை எடுப்பதுபோல கனவு காண்பது, நினைத்த செயல்கள் இனிதே முடியும் என்று குறிப்பிடும்.

இப்படியான கனவை

வியாபாரி ஒருவர் கண்டால், அவருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெண் ஒருத்தி கண்டால், சகல செல்வங்களும் ஸித்திக்கும்.

கீழே விழுவது கீழே விழுவது போல கனவு கண்டால், பொருள் நஷ்டமடைய நேரிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.