பல்லி தொல்லை இனிமேல் இல்லை!

Lizard-1
Lizard-1

பல்லி விரட்டி மருந்துகள், நச்சுத் தன்மை கொண்டவை. குழந்தைகளுக்கும் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் மிகவும் ஆபத்தானவை. எனவே யாருக்கும் ஆபத்தை உண்டாக்காத சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் பல்லிகளை விரட்டுவதற்கான எளிய வழிமுறைகள்.

காபித்தூள்:

சிறிது காபித்தூளை மூக்குப் பொடியுடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். பல்குத்தும் குச்சிகளின் முனையில் இவ்வுருண்டைகளைக் குத்தி, பல்லிகள் நடமாடும் இடங்களில் அவற்றை வைக்கவும். இவற்றை உண்ணும் பல்லிகள் மடிந்துவிடும். நாப்தலின் உருண்டைகள், சிறந்த பூச்சிக் கொல்லிகள், உங்கள் வீட்டு அலமாரிகளிலும், சிங்குகளிலும், கேஸ் அடுப்புக்கு அடியிலும் போட்டு வையுங்கள். பல்லிகளை விரட்டும் சிறந்த முறை இது.

மயில் இறகுகள்:

மயில் இறகுகளைப் பார்த்து பல்லிகள் பயப்படும். பல்லிகள் வசிக்கும் இடங்கள் நடமாடும் இடங்களுக்கு அருகிலுள்ள சுவர்களில் மயில் இறகை ஒட்டி வையுங்கள். இதனால் உங்கள் வீட்டிலிருந்து பல்லிகள் ஓடிவிடும்.

கொசுவிரட்டி
உங்கள் வீட்டில் இருக்கும் பல்லியை வெளியேற்ற மஸ்கிட்டோ ஸ்பிரே உபயோகமாக இருக்கும். கொசுவிரட்டி ரசாயன வாசனை பல்லிக்கு பிடிக்காது. பல்லியை விரட்ட அதன் அருகில் கொசுவிரட்டி ரசாயனத்தை தெளித்தால் பல்லி வெளியே ஓடிவிடும். முடிந்தவரை இதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அப்படி பயன்படுத்தினாலும் பல்லியை விரட்ட கொஞ்சமாக உபயோகப்படுத்துங்கள்

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

முட்டை ஓடு
பல்லிகளுக்கு முட்டை வாசனை பிடிக்காதாம். நீங்கள் முட்டை உபயோகித்த பிறகு முட்டை ஓடுகளை பல்லிகள் வரும் இடத்தில் வைத்தால் முட்டை வாசனையால் பல்லிகள் வராது. ஆனால் முட்டை ஓடுகளை நீங்கள் மறுநாளே மாற்றி விட வேண்டும். இல்லையென்றால் முட்டை ஓட்டில் அதிக அளவில் பாக்டீரியா வளர்ந்து விடும்.

பூண்டு
ஒரு துண்டு பூண்டை எடுத்து அதை சிறிதாக நறுக்கி பல்லிகள் அதிகம் இருக்கும் இடத்தில் வைத்துவிடுங்கள். பூண்டின் வாசனை பல்லியை வெளியே ஓட செய்து விடும். வெறும் பூண்டு பல்லை அப்படியே வைத்தால் வேலை செய்யாது. பூண்டு பல்லை சிறிதாக நறுக்கி வைக்கவேண்டும்.

மிளகு ஸ்பிரே : பல்லிக்கு மிளகின் வாசனை மற்றும் அதன் காரத்தன்மை முற்றிலும் ஒத்துக்கொள்ளாது. மிளகைத் தண்ணீரில் நன்கு ஊற வைத்து மிக்ஸியின் மைய அரைத்து அதன் நீரை மட்டும் வடிகட்டி அதை வீட்டுச் சுவர்களில் ஸ்பிரே செய்தால் பல்லி வீட்டை விட்டு ஓடிவிடும்.

வெங்காயம் : வெங்காயத்தை கதவு , ஜன்னல், நுழைவு வாயில் ஆகிய இடங்களில் மாட்டி வையுங்கள். அது தங்கும் இடத்தில் வெங்காயத் துண்டுகளை நறுக்கி வைத்தால் பல்லித் தொல்லை குறையும்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

இரசக் கற்பூரம் : இது பொதுவாக பலரின் வீடுகளில் பயன்படுத்தக் கூடியதுதான். பீரோக்களில் வாசனைக்காக வைக்கப்படும். இது வாசனைக்கு மட்டுமல்ல பல்லியின் தொந்தரவை போக்கவும் உதவும். பல்லி வரும் இடங்களில் இதை வையுங்கள்.

ஃபிளை பேப்பர் : இது பொதுவாக ஈ தொந்தரவு, வண்டு போன்ற பறக்கும் பூச்சிகளைப் பிடிக்க வீட்டில் கட்டி வைப்பார்கள். இது பல்லியின் அட்டகாசத்தை ஒழித்துக்கட்டவும் உதவும். சுவரில் இதை ஒட்டி வைத்தால் பல்லி அந்தப் பேப்பரில் அப்படியே ஒட்டிக் கொள்ளும். இது சூப்பர் மார்க்கெட், ஹோம் நீட் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories