மச்சம் சொல்லும் மிச்சம்: திருமணம் பற்றி அறிய…

Published:

mole 5 - 2026

சுக்கிர மேடு

இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் நல்ல முறையில் வாழ்ந்தாலும் விரைவிலேயே அவர்கள் நன்னெறி மற்றும் தர்ம பாதையில் இருந்து விலகி வாழத் தொடங்கிவிடுவார்கள்.

சந்திர மேடு

இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு தண்ணீரில் கண்டம் இருக்க வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் ஆறு, ஏரி, குளம், கடல் போன்ற நீர் அதிகம் இருக்கும் இடங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். மேலும் இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு திருமணம் தாமதமாக நடக்கவும் வாய்ப்புள்ளது.

குரு மேடு

இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு திருமண வாழ்க்கை சோதனைகள் நிறைந்ததாக இருக்கும். மேலும் இவர்களின் வாழக்கையில் பல தடைகள் ஏற்படும். வாழ்க்கையில் நினைத்தது கிடைக்க மற்றவர்களை காட்டிலும் பல மடங்கு முயற்சியை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

சனி மேடு

இந்த இடத்தில் மச்சம் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டமான ஒன்றாகும். இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு தாமதமாகவே திருமணம் நடக்கும் திருமணம் நடந்தாலும் இவர்களின் திருமண வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. தங்கள் துணையுடன் சேர்ந்து வாழ்வது இவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

சூரிய மேடு

இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல இறக்கங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்களை சுற்றியிருப்பவர்கள் செய்யும் காரியங்களுக்கு இவர்கள் பழி சுமக்க வேண்டியிருக்கும். உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களை தொடர்ந்து துன்புறுத்தி கொண்டே இருப்பார்கள்.

புதன் மேடு

சுண்டு விரலுக்கு கீழே மச்சம் இருந்தால் அது புதன் மேடு என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்வில் திடீர் இழப்புகளை அடிக்கடி சந்திப்பார்கள். அது பண நஷ்டமாகவும் இருக்கலாம், உறவு நஷ்டமாகவும் இருக்கலாம்.

ஆயுள் ரேகை

ஆயுள் ரேகையில் மச்சம் இருப்பது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். உங்களின் ஆயுள்ரேகை எவ்வளவு நீளமானதாக இருந்தாலும் அங்கு மச்சம் இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை மோசமாவதுடன், வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.

திருமண ரேகை

உங்கள் திருமண ரேகையில் மச்சம் இருப்பது உங்கள் திருமண வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகும். இந்த இடத்தில மச்சம் இருப்பவர்கள் தங்கள் துணையை நிரந்தரமாக பிரிய வாய்ப்புள்ளது.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Related articles

Recent articles

spot_img