கனவின் விளைவு: ஆற்றில் குளிப்பதாக கனவு கண்டால்..!

Published:

dream
dream

ஆற்றிலோ, குளத்திலோ தண்ணீர் குடிப்பது போன்ற கனவு வந்தால் மனதில் உள்ள வெகுநாள் ஆசை நிறைவேற போவதாகவும் கடன் அடைபடுவதாகவும் அர்த்தம். ஆற்றில் குளிப்பது போல கனவு கண்டால் துயரங்கள் விலகி இன்பம் வரப்போவதாக எடுத்து கொள்ளலாம்.

அரசன்: அரசனைக் கனவில் கண்டால், அரசு காரியங்கள் வெற்றி அடையும். இது தவிர அரசாங்கத்தால் நன்மைகள் உண்டு. தன லாபம் கூட ஏற்படும்.

அகதி, எண்ணெய்த் தலை அல்லது வழுக்கைத் தலை மனிதன்: பெண்ணாக இருந்து நீங்கள் கண்ட எண்ணெய்த் தலை அல்லது வழுக்கைத் தலை மனிதன் ஒருவேளை உங்கள் கணவனாக இருந்தால் தீமை இல்லை. எல்லா வகையிலும் அது நன்மை தான். அதுவே வேறு ஒரு மனிதனாக இருந்தால் கையில் காசு தங்காது. கடன் வாங்கக் கூட எதிர்காலத்தில் நேரிடும். இதற்கு மகா லட்சுமியை பூஜிப்பது நல்லது.

பெரும் கூட்டத்தை கனவில் கண்டால்:
அது கல்யாணமாக இருந்தால் நல்லது
அல்ல. இறந்த சடங்கில் பெரும்
கூட்டத்தைக் கண்டால் நல்லது.
கோயில்களில் அல்லது அது சார்ந்த
இடங்களில் கண்டாலும் தொழில்
விருத்தி மேன்மை உண்டு.

துறவி:
துறவிகளைக் கனவில் கண்டால்
பெரியோர்களின் உதவி
உடனுக்குடன் கிடைக்கும்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

மாற்றுத் திறனாளிகளை கனவில் கண்டால் : மாற்றுத் திறனாளிகளை கனவில் கண்டால் இதுநாள் வரையில் நீங்கள் மறைத்து வைத்திருந்த
உண்மைகள் தேவை இல்லாத நேரத்தில்
ஆபத்தான இடத்தில் வெளிப்படும்.

மன நல மருத்துவமனை, மன நலம்
பாதிக்கப்பட்டவர்கள் :மன நலம் துரத்துவது போல கனவு கண்டால் நீங்கள் ஏதோ நிதானம் தவறி செய்யப் போகும் செயலால் பிற்காலத்தில் அவதிப்படுவீர்கள் என்று அர்த்தம். அதே போல,‌மன நல மருத்துவமனையை கனவில் கண்டால் வீண் செலவுகள், அவமானம் வந்து சேரும்.

சந்திர, சூரியர்கள், நக்ஷத்திரம், வானம், கடல் மற்றும் இயற்கையான விஷயங்கள் :-சந்திர சூரியர்கள், வானம், கடல், நக்ஷத்திரம் ஆகிய இவைகளைக் கனவில் கண்டால் நன்மைகள் பல வந்து சேரும்.

பெற்றோர் : பெற்றோரைக் கனவில்
கண்டால் நினைத்த காரியங்கள்
எல்லாம் நன்மையில் முடியும்.

இறப்பு: நமக்கு வேண்டிய யாராவது
இறந்து விட்டதாகக் கனவு கண்டால்
துன்பங்கள் விலகும். நாமே இறந்து
விட்டதாகக் கனவு கண்டால் ஆயுள்
கூடும்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

Related articles

Recent articles

spot_img