திரிபலா மருத்துவம்
நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் மூன்றும் சேர்ந்ததே திரிபலா. அதிலும் அதிக அளவில் கலந்திருப்பது நெல்லிக்காயே . பல நோய் களை குணப்படுத்தும் திரிபலா லேகியம், சூர்ணம் இராஜ மருந்துகளாகும்.
இரத்தத்தின் தூய்மைக்கு…
ஒரு பிடி கொத்துக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். சீமை அத்திப்பழம் இரண்டையும் அதிலேயே ஊற வைத்து காலையில் அப்படியே வேகவைத்து வடிகட்டி பால் சேர்த்து சாப்பிட இரத்தத்தை தூய்மைப்படுத்துவதுடன் உடம்பிற்கு சுறுசுறுப்பையும் அளிக்கிறது.
தோல் சுருக்கம் நீங்க…
இளவயதில் தோவில் சுருக்கம் ஏற்பட்டால் கடலை மாவு, ஆவாரம்பூ இரண்டையும் பொடி செய்து பாலில் குழைத்து உடம்பில் பூசி அரைமணி நேரம் ஊறிக் குளிக்க குணமாகும்.
நரம்புச் சிலந்தியா?
நரம்புச் சிலந்திக்கு கனிந்த பப்பாளிப் பழத்தை கையால் பிசைந்து, சிலந்திப் புண் மேல் வைத்து ஒரு பெரிய வெற்றிலையை அதன் மேல் மூடி துணியில் கட்டுப் போட மூன்றே நாள்களில் குணம் தெரியும்.
வாந்தியும் பேதியும் நிற்க…
எலுமிச்சம் பழச்சாறு காலராவுக்கு நல்ல வைத்தியம் சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து தேனுடன் இதன் சாற்றையும் நீரையும் சேர்த்துக் காய்ச்சி கொடுக்க வாந்தியும் பேதியும் உடனே நிற்கும்.