health tips - 2026

அப்பாச்சி தீர்வு: மாரடைப்பு, தாதுபலம், சளி, இருமல், கோழை, வயிற்றில் பூச்சி..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

மாரடைப்பு

‘ஏ ‘ குரூப் இரத்தம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு நோய் அதிகம் ஏற்படுகிறது. புகைப்பது, மது அருந்துவது, உடல் பருப்பது ஆகியவற்றில் கவனமாக இருந்து மாரடைப்பு நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

சளி, இருமலுக்கு..

சிறிதளவு மஞ்சளை தட்டிப்போட்டு பால் சேர்த்துக் காய்ச்சி தேன் கலந்து பருக சளித் தொல்லை நீங்கும்.

அதிமதுரம், வால் மிளகு. அரிசி திப்பிலி, சுக்கு இவற்றை இடித்து தூளாக்கி சலித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் பாலை கொதிக்கவிட்டு ஒரு ஸ்பூன் தூள் சேர்த்து மூடி வைத்து ஆறிய பின் வடிகட்டி காலை, மாலை அருந்தி வர இருமல் குணமாகும்.

தாது பலவீனமா?

அம்மான் பச்சரிசி இலையை அரைத்து சிறு உருண்டையளவு மோரில் கரைத்து மூன்று நாள்கள் சாப்பிட்டு வர் தாது கெட்டிப்படும். ஆளால். அந்த மூன்று நாள்களும் உப்பில்லா பத்தியம் இருக்க வேண்டும்.

இருமலுடன் கோழையும் வருகிறதா?

அதிமதுரம், துளசி இலை, ஆடாதோடா இலை, கடுக்காய், கண்டங் கத்திரி பழம் இவற்றை சம எடை எடுத்து வெயிலில் உவர்த்தி தனித்தனியே இடித்து சலித்து ஒன்றாகக் கலந்து காற்று புகாமல் பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு காலை, மாலை 3 சிட்டிகைப் பொடியை பசு நெய்யில் குழைத்து சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.

வயிற்றில் பூச்சியா?

மாதுளை வேரின் பட்டையை கஷாயம் வைத்து காலையில் ஓர் அவுன்ஸ் குடித்து சிறிது விளக்கெண்ணெயும் குடிக்க நன்றாக பேதியாகும். புழுக்களும் வெளியேறும்.

குப்பை மேனி வேரைக் கஷாயம் வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள பூச்சிகள் மடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.