ஆரோக்கிய சமையல்: பருப்பு தினை பாயாசம்!

Published:

paruppu thinai payasam - 2026

பருப்பு தினைப் பாயசம்

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு, தினை – தலா அரை கப் வறுத்த தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் பொடித்த பனைவெல்லம் – முக்கால் கப்
தேங்காய்ப்பால் – அரை கப் ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
கடலைப்பருப்பையும் தினையையும் லேசாக வறுத்து, குழைவாக வேகவைக்கவும். அத்துடன் பனைவெல்லம், வறுத்த தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பருகவும்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Related articles

Recent articles

spot_img