health tips - 2026

அப்பாச்சி தீர்வு: ஜன்னி, உடல்எடை, கால்வலி, உமிழ்நீர் சுரத்தல், தோல்நோய், நரம்புபலம்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

ஜன்னி சரியாக…

இலவங்கப்பட்டையை தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை குடித்து வர ஜன்னியின் வேகம் குறையும்.

வாயில் நீர் ஊறுகிறதா?

சீரகத்தையும் சர்க்கரையையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் போது மென்று தின்று வர சில நாள்களில் வாயில் நீர் ஊறுவது குணமாகும்.

பிரமதண்டு மருத்துவம்

பிரமதண்டின் வேரைச் சுத்தம் செய்து உலர்த்தி தூள் செய்து சம அளவு சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு காலை, மாலை உண்டு வர நரம்புகளுக்கு நல்ல பலம் உண்டாகும். தோல் சம்பந்தமான வியாதிகள் குணமாகும். அரிப்புப் படைகளும் குணமாகும்.

உடல் எடை குறைய…

இரண்டு ஸ்பூன் தேனை அரை மூடி எலுமிச்சம் பழச்சாற்றுடன் கவந்து ஒரு டம்ளர் வெந்நீர் விட்டு பருகி வர உடல் எடை குறையும். சக்தி பெருகும்.

கால்களில் வலியா?

இது ஒரு வித வாத சம்பந்தமான நோயாகும். இதற்கு பிரண்டையை இடித்து சாறு பிழிந்து ஆமணக்கு எண்ணெய் விட்டுக் காய்ச்சி கால்களில் தட வி வர வலி குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.