health tips - 2026

அப்பாச்சி தீர்வு: தலையில் புண், வயிற்றில் புண், ஞாபகசக்தி, நகசுத்தி, ஆரோக்கியம்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

ஞாபக சக்தி பெருக…

அரிசி திப்பிலியை தேனில் பத்து நாள்கள் ஊற வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு திப்பிலியை எடுத்துவாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட ஞாபக சக்தி பெருகும்.

வயிற்றுப் புண் குணமாக…

அகத்திக் கீரையை நிழலில் காய வைத்து நன்றாக இடித்து சலித்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூள் தூளை வாயில் போட்டு நீராகாரம் சாப்பிட்டு வர வயிற்றுப் புண் குணமாகும்.

ஆரோக்கியமாக வாழ…

பால் பத்தியத்தினால் வயிற்றில் உண்டாகும் செரிப்புக் குற்றங்கள் நீங்குகின்றன. தொண்டைக்கட்டு, இரைப்பு. காச நோய்கள் விலகுகின்றன. நீரிழிவு, சீதபேதி, மந்தம், வயிற்றுக் படுப்பு, வயிறு. உப்பல், குடல் புண்கள் குணமாகின்றன. தினமும் இரவில் ஒரு டம்ளர் பசும்பால் குடித்து வர ஆரோக்கியமாக வாழலாம்.

நகச்சுத்தி சரியாக…

லிங்க செந்தூரம் மூன்று அரிசி எடை, பறங்கிப் பட்டை சூரணம் 5 அரிசி எடை இரண்டையும் தேனில் கலந்து சாப்பிடலாம். மருதாணி இலையை அரைத்து நகச்சுத்திக்கு பூசலாம். விரைவில் குணமாகும்.

தலையில் புண்ணா?

உடல் உஷ்ணத்தினால் சில சமயம் தலையில் புண் ஏற்படுவதுண்டு. கீழாநெல்லி சமூலம், நில வேம்பு, கருஞ்சீரகம், கசகசா, அருகம்புல் இவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துக் காய வைத்து சேர்த்து இடித்து இந்தப் பொடியை வெந்நீரில் குழைத்து தலை முழுவதும் தாராளமாகத் தடவி அரை மணி நேரம் ஊறிக் குளிக்க சில நாள்களில் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.