maravali kizanku halwa - 2026

செம டேஸ்ட் அல்லவா.. மரவள்ளிக்கிழங்கு அல்வா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
maravali kizanku halwa - 2026

மரவள்ளிக்கிழங்கு அல்வா
தேவையானவை:

துருவிய மரவள்ளிக்கிழங்கு – கால் கிலோ
சர்க்கரை – 150 கிராம்
நெய் – 150 கிராம்
முந்திரி, பாதாம் – தலா 20
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:

அடிகனமான கடாயில் 4 டீஸ்பூன் நெய்விட்டு முந்திரி, பாதாம் வறுத்தெடுக்கவும். பின் வாணலியில் 4 டீஸ்பூன் நெய்விட்டு துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். அதே வாணலியில் சர்க்கரையைப் போட்டு, 50 மில்லி தண்ணீர்விட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். பின்பு அதில் வதக்கி வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்கு கிளறவும். நெய் பிரிந்து வந்தவுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்துக் கிளறி எடுக்கவும். சுவையான அல்வா தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.