health tips - 2026

அப்பாச்சி தீர்வு: நீரழிவு நோய், நீர்க்கோவை, சிறுநீர்குழாய் புண், நீர்க்கடுப்பு..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

நீரழிவு நோய் முற்றிலும் குணமாக

சுத்தமான எள்ளை ஐந்து ரூபாய் எடை அளவுக்கு எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் இட்டு நீரூற்றி ஊறச் செய்ய வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து எடுத்து கசக்கிப் பார்த்தால் அதன் கருநிற தொலி கழன்று என் வெண்மையாக இருக்கும். அதை முறத்தில் போட்டு நிழலில் காய வைக்க வேண்டும். நன்றாய்க் காய்ந்த பின்னர் இரும்புச் சட்டியில் இட்டு வறுக்க வேண்டும். பிறகு பனை வெல்லத்தைக் காய்ச்சி பாகுபோல் செய்து அதில் இந்த எள் தூளைப் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழம் அளவுக்கு உருண்டையாக உருட்டி கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

25 நாட்களுக்கு காலை, மாலை என இரு நோமும் இந்த உருண்டைகளை உண்டுவர நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிடும். இந்த நாட்களில் இனிப்பு பண்டங்களை உண்ணாமலும், பாகற்காயை தினசரி உணவில் சேர்த்து உண்பதும் நல்லது.

நீரிழிவு நோய் குணமாக

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இச்சாபத்தியத்துடன் தினமும் இருவேளை நெல்விக்காய் அளவுக்கு சுத்தமான எள்ளை எடுத்து அதை பனைவெல்லத் துடன் வைத்து அரைத்து உண்டுவர அந்த நோய் குணமாகும்.

நீர்க்கடுப்பு

பசலைக் கீரையைச் சமைத்து மூன்று நாட்கள் உண்டுவர நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை அகலும்.

நீர்க்கோவை நோய்

நீர்க்கோவை நோய் உடையவர்கள் நெருப்பினில் எள்ளைத் தூவி அது வெளியிடும் புகையை சுவாசித்து வர நீர்க்கோர்வை நோய் குணமடையும்.

சிறுநீர் குழாய் புண்கள்

தேனைத் தண்ணீரில் கலந்து தினசரி மூன்று வேளை தவறாமல் 7 நாட்கள் குடித்துவர சிறுநீர்க் குழாயில் காணும் புண்கள் ஆறும்.

நீரிழிவு நோய்

கொட்டை நீக்கிய நெல்லிக்காயை இடித்துச் சாறு பிழிந்து 2 அவுன்ஸ் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்குச் சம அளவு தேனைக் கலக்க வேண்டும். பின்பு சிறிதளவு மஞ்சளைப் பொடி செய்து தேன் கலந்த நெல்லிச்சாற்றில் போட்டு கலக்க வேண்டும். இந்தக் கலவையை தினமும் இரு வேளை ஒரு தேக்கரண்டி வீதம் தொடர்ந்து 48 நாட்களுக்கு அருந்தி வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.

இந்த நோய் உள்ளவர்கள் ஆரஞ்சு, அன்னாசி, முதலிய சர்க்கரை சத்து இல்லாத பழங்களை அதிகமாக உண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.