கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தாண்டுக்கான ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் ஒன்றாம தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை கொண்டாடாப்பட உள்ளது. இந்த பண்டிகைக்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். இது போன்ற நேரங்களில் கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான ஓணம் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோச்சுவேலி சுவைதா ரயில் செப்டம்பர் 9ம் தேதி இரவு 7 மணிக்கு இயக்கப்படும். கோச்சுவேலி – சென்னை சென்ட்ரல் இடையே செப்டம்பர் 10 ல் மாலை 6 மணிக்கு சுவைதா ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



